இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து தோனி..!

111
609
இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து தோனி..!
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து தோனி..!

Advertisement

‘‘இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து தோனி. இவர் சிறப்பாக செயல்படும்போது,

மாற்று வீரர் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை,’’ என, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி, 36. ‘கீப்பிங்’, பேட்டிங்கில் தொடர்ந்து அசத்துகிறார்.

சமீபத்திய, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 5 போட்டியில் ஒரு அரை சதம் உட்பட மொத்தம் 162 ரன் குவித்தார்.

தவிர, ஒருநாள் அரங்கில், 100 முறை ‘ஸ்டம்பிங்’ செய்த முதல் கீப்பர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

இந்நிலையில், எதிர் வரும் உலக கோப்பையில் (2019, இங்கிலாந்து, வால்ஸ்) தோனி தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

தற்போது வரை, உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த கீப்பராக தோனி திகழ்கிறார். துடிப்பாக செயல்படும் இவர்,

இந்திய அணியின் சொத்து போன்றவர். ‘டிரசிங் ரூமில்’ சீனியர் வீரராக உரிய ஆலோசனை தருகிறார்.

கவாஸ்கர், சச்சின் போன்றோர் 36 வயதில் இருக்கும்போது, மாற்று வீரர் குறித்து நாம் சிந்திக்கவில்லை. அவர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக விளைாடினர்.

இதைப்போல, தோனியும் தனது செயல்பாட்டில் நம்பிக்கை தரும்போது, மற்றொரு வீரர் எதற்காக தேவை.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என யாராவது நினைத்தால், அது தவறான கற்பனை. இந்த எண்ணத்திற்கு இடமே தர வேண்டாம்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறவே விளையாடுகிறோம். அதே நேரம், ஒவ்வொரு வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

தவிர, உலக கோப்பை (2019) தொடருக்கு முன்பாக, திறமையான அணியை தேர்வு செய்ய வேண்டும்.

வீரர்களுக்கு உடற்தகுதி முக்கியமானது. இதற்கென, சில விதிகள் இருப்பதால்தான் ‘பீல்டிங்கில்’ சிறந்த அணியாக இந்தியா உள்ளது.

வீரர்கள் தேர்வில் நான்  தலையிடுவது இல்லை என்று கூறியுள்ளார்.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என யாராவது நினைத்தால், அது தவறான கற்பனை. இந்த எண்ணத்திற்கு இடமே தர வேண்டாம்.

SHARE