ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியின் ஆண்டு விழா

32
513
Advertisement
Advertisement

கோவை பச்சாபாளையத்திலுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. 

கோவை வெர்டிகல் மனித வள மேம்பாட்டுத் தலைவர் திரு.M.செந்தில்குமார்அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

“வெளிநாட்டின்வெர்டிகல்நிறுவனத்தில்பணிபுரியும்இக்கல்லூரியின்முன்னாள்மாணவர்களைவெகுவாகப்பாராட்டினார்.மேலும்இக்கல்லூரியின்பலமாணவர்களைவெர்டிகல்நிறுவனத்தில்பணிபுரியஅழைப்புவிடுத்தார்.

மாணவர்களாகிய நீங்கள், உங்கள் மனதிற்கு முழு திருப்தியளிக்கக் கூடிய துறையைத் தேர்ந்தெடுங்கள். மேலும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

படித்தலும் தெரிந்துகொள்ளுதலும் வாழ்நாள் முழுதும் அவசியம். பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக்கொண்டு அறிவைப் புதுப்பித்தால் தான், உங்கள் துறையில் வெற்றி பெற முடியும்”.

         கல்வி இயக்குனர் முனைவர் எபிநேசர் ஜெயக்குமார் அவர்கள் தலைமை உரையாற்றினார். உரையின் முடிவில், கல்லூரிப் படிப்பை 2017ல் நிறைவு செய்யும் மாணவர்களில் சிறந்தமாணவர் P.ஷேர்ஐின் மற்றும் சிறந்த மாணவி K.பப்புபிரித்தி ஆகியோருக்குத் தங்கப்பதக்கங்கள் வழங்கிக் கெளரவித்தார்.

        கல்லூரி முதல்வர் முனைவர் பால்ராஜ்அவர்கள், சென்ற ஆண்டில் நிகழ்ந்தசாதனைகள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

சென்ற ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் தகுதிப்பட்டியலில் முதல்மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE