போக்குவரத்து அமைச்சருக்கு கேள்வி … சிட்டிசன்ஸ் வாய்ஸ்

M.R.விஜயபாஸ்கர்

Advertisement

கேள்விக்கணைகள்

Advertisement

பொது மக்கள்நலம் பற்றிய ஒவ்வொரு விசியத்திற்க்கும்….! போராட்டம் செய்து தான் பெற்றாக வேண்டும் என்பது சுதந்திர இந்தியாவில் எழுதப்படா விதியாகும்….!

அந்த விதிமுறைப்படி கோவை” சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்”  போக்குவரத்து துறை அமைச்சர் (M.R.விஜயபாஸ்கர்) கவனத்திற்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்…….! அதில் கேட்க்கப்பட்டுள்ளதாவது…..

அரசுத்தரப்பில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளா
அட்டை , குடும்ப அட்டை( Smart Card) போன்றவை வழங்கப்படுகிறது,
இதை மக்களும் வரவேற்கின்றனர். KIOSKI என்னும் தனியார்
அமைப்பு இவ்வகையான சேவைகளை கட்டணமுறையில்
வழங்கிவருகிறது.. தொலைதூரகிராமங்களில் வசிக்கும் மக்கள்
இச்சேவையை பயன்படுத்துகின்றனர்..

இமேற்கூரிய சான்றிதழ்களில்(முகவரி,பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவறில் ஏதேனும் பிழைஏற்படின் அதற்கு அரசோ பிழை ஏற்படுத்திய அதிகாரிகளோபொறுப்பேற்று அதனை சரிசெய்து கொடுப்பதில்லை மாறாககுடிமக்களே பொறுப்பேற்று அதனை சரிசெய்துக்கொள்ள வேண்டும்…

சரி செய்ய மீண்டும் ஒருக்கட்டணம் செலுத்தவேண்டும் இது அரசின்
செயலின்மையை காட்டுகிறது. மேலும் அம்மாநிடரின் உடலுழைப்பு
மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றை ஒரு பொருட்டாகமதிப்பதில்லை.. தவறான விவரங்களை குடிமக்கள் கொடுப்பதில்லைஆனால் தவறான விபரங்களுடன் சான்றிதழ்கள்வழங்கப்படுகிறது..காரணம் சரியான பயிற்சியின்மை மற்றும்கவனக்குறைவான போக்கு இதனால் பாதிக்கப்படுவதோ சராசரி மக்கள்.

ஏனவே இது போன்ற குறைகளை களைய அரசு விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்..தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கொண்டு அவ்விடங்களை
நிரப்புவதன் மூலம் சரிசெய்யலாம் .

வாகன ஒட்டுனர் உரிமம் இபாஸ்போர்ட் உரிமங்களை (ELCOT-TCS)
போன்ற நிறுவனங்கள் வழங்கிவருகிறது. மேலும் வாகன ஒட்டுனர்
உரிமம் இபாஸ்போர்ட் ஆகியவை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே
செல்லுபடியாகும் அக்காலக்கெடு முடிந்தபிறகு மீண்டும் அதனைப்
புதிப்பிக்க வேண்டும்.

காலக்கெடு முடிந்த பிறகு அந்த உரிமத்தை(வாகன ஒட்டுனர் உரிமம் இபாஸ்போர்ட்) பயன்படுத்துவது குற்றமாகும்அல்லது அபராதத்தொகை செலுத்தவேண்டியிருக்கும்.

காலக்கெடுமுடிந்த பிறகு அபராதத்தொகை செலுத்தியே உரிமத்தை புதுப்பிக்கமுடியும்… ஆகையால் காலக்கெடுமுடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புஎச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்.

இதனால் அவர்கள்காலக்கெடு முடிவதற்கு முன்பு அவற்றை புதிப்பிக்க ஒரு
நினைவூட்டலாக அமையும். மேலும் உரிமத்தை புதிப்பிக்காத்தால்
ஏற்படும் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்க முடியும்.

மக்கள் பணம்செலுத்தியே இவ்வகை சேவைகளை பெறுவதால் ‘எச்சரிக்கை
குறுஞ்செய்தி’ கேட்பதும்,சேவைகளை பெறுபவர்களின் தொலைபேசி
எண்மற்றும்EMAILஆகியவைகணிணியில்முன்னதாகவேபதிவுசெய்யப்பட்டிருக்கும்காலக்கெடுமுடிவதற்குமுன்பு’எச்சரிக்கைகுறுஞ்செய்தி’பதிவுசெய்யப்பட்டநபர்களின்தொலைபேசிஎண்ணுக்குஅனுப்பிநினைவூட்டுவதில்தவறில்லைஎன்று கேட்க்கப்பட்டுள்ளது…!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119