கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் : இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து..!

78
543
கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் : இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து..!
Advertisement

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் : இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து..!

Advertisement

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில்,

4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹீ பிங்ஜியோவுடன் மோதினார்.

சுமார் 1 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்த அரை இறுதிப் போட்டியில், சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீராங்கனையிடம் சிந்து தோற்றிருந்தார்.

எனினும் எழுச்சி மிக்க சிந்து கடந்த சீனா சூப்பர் சீரிஸ் பிரிமியர் 2016, இந்தியா சூப்பர் சீரிஸ் 2017 மற்றும் லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி கிராண்ட் பிரீ  போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE