அரையிறுதியிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!

100
434
அரையிறுதியிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
Advertisement

அரையிறுதியிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!

கொரிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். அரையிறுதியிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!

தென் கொரியா தலைநகர் சியோலில், கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் மினாட்சு மிடானியுடன் மோதினார்.

முதல் செட்டை 21–19 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 16–21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 21–10 என வசப்படுத்தினார்.

முடிவில், சிந்து 21–19, 16–21, 21–10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement
SHARE