பிரச்சனை ஆனதும்…PRO வை கைகாட்டிய மாவட்ட ஆட்சியர்..

தி.மு.க.எம்.எல்.ஏ நந்தகுமார்

0
113
Advertisement

வேலூர் மாவட்டம்

கருகம்புத்தூரில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க மாவட்டத்தில் 777 வெல்மா அங்காடிகள் திறக்க திட்டமிடப்பட்டு இன்று முதல் கடை திறக்கப்பட்டது.
வேலுர் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியானது., கிராமம் அனைக்கட்டு தொகுதிக்குட்பட்டது என்பதினால் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் தனது தொகுதியில் அரசு விழா நடத்துகின்றீர்கள், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மதிக்கமாட்டீர்களா ? அரசு நிகழ்ச்சி தானே? ஏன் என்னிடம் கூறவில்லை? என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான்  தி.மு.க.எம்.எல்.ஏ நந்தகுமார் வெளிநடப்பு செய்வதாகவும் கூறி எழுந்தார். ஆனால் அவரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்காததற்கு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரே காரணம் என்றும்,
இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறிய ஆட்சியர் ராமன், பி.ஆர்.ஒ விற்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்