தேசிய செஸ் போட்டியில் கோவையை சார்ந்த பிரியங்கா

276
533
????????????????????????????????????
Advertisement

குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் நடை பெற்ற தேசிய செஸ்போட்டியில் கோவையை சார்ந்த பிரியங்கா மகளிர் பிரிவிற்கான முதல்பரிசை வென்றார்.

Advertisement

குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் Dr N மகாலிங்கம் 28th தேசிய செஸ் போட்டி (17வயதுக்கு உட்பட்டோர்) 2017 அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதிவரை நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நகரில் தேசிய செஸ்போட்டி நடைபெறுகிறது. 21 மாநிலங்களில் இருந்து 170 போட்டியாளர்கள் இந்த 9நாள் போட்டியில் போட்டியிட்டனர் . இந்த போட்டியில் முதல் இரண்டு இடம்பிடித்தசெஸ் வீரர்கள் 2018 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும்காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதி அன்று KCT கல்லூரியில் பரிசு வழங்கல்விழா நடைபெற்றது. டாக்டர் என். எம். செஸ் அகாடமி துணைத் தலைவர் திரு ரவிகந்தசாமி, கூட்டத்தை வரவேற்றார். மேலும் டாக்டர் என். எம். செஸ் அகாடமி
தொடர்ந்து வரவிருக்கும் ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவில்போட்டிகளை நடத்தும் என்று கூறினார். இந்த அகாடமிரேட்டிங் மற்றும் பிறவீரர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளது என்றும் தொடர்ந்து கோயம்புத்தூர்
மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள செஸ் வீரர்களுக்கு பயிற்சிகளை தொடர்ந்து
நடத்தும் என்றும் கூறினார்.

Dr ம மாணிக்கம்

சிறப்பு விருந்தினர் Dr ம மாணிக்கம், தலைவர், தமிழ் நாடு செஸ் அசோஸியேஷன்,அவர் செஸ் விளையாட்டை பற்றியும் அதன் வளர்ச்சியை பற்றியும் விரிவாகஎடுத்துரைத்தார் மற்றும் மற்ற விளையாட்டுக்களை விட செஸ் விளையாட்டு
மிகவும் சிக்கலானது என்றும், அதில் சர்வதேச வெளிப்பாடு தேவை என்றும்
கூறினார்.

திரு.P. ஸ்டீபன் பாலசாமி, தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர்சிறப்புரை ஆற்றினார். அவர் பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் மற்றும்KCT கல்லூரியின் நிர்வாகத்தையும் பாராற்றினார். இந்த போட்டி பற்றிய புத்தகத்தை
டாக்டர்.எம். மாணிகம் வெளியிட்டார். திரு. விட்டல் மாதவ் தலைமை நடுவர்போட்டியின் அறிக்கையை பகிர்ந்தார். பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களதுபெற்றோர்கள் போட்டி பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

முதல் 20 வீரர் வீராங்கனைக்கு ரூ .2.5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ராஜாரித்வி, தெலுங்கானா மாணவர் பிரிவில் வெற்றி பெற்றார். எரிகாசி அர்ஜூன்,தெலுங்கானா மற்றும் மித்திர்பா குஹா, மேற்கு வங்காளம் இரண்டாம் மற்றும்மூன்றாம் பரிசை வென்றனர். பிரியங்கா, கோயம்புத்தூர் மாணவியர் பிரிவில் வெற்றிபெற்றார்.

அர்பிதா முகர்ஜி , மேற்கு வங்காளம் மற்றும் தரினி கோயல், சண்டிகர்இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர்.
பிரியங்கா, தனக்கு தொடர்ந்து ஆதரவளித்த ஸ்ரீ சங்கர் வானவராயர் அவர்களுக்கும்KCTயின் நிர்வாகத்துக்கும் தமது நன்றியை தெரிவித்தார். ராஜ ரித்விக், KCTயின்நிர்வாகத்துக்கும் மற்றும் TN செஸ் அசோசியேஷனுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த
சாதனைக்காக அவருக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.முனைவர் R S குமார், KCT கல்லூரியின் முதல்வர் நன்றியுரை வழங்கினார்.

சங்கரமூர்த்தி, 7373141119

SHARE