மரத்தடியில் பயிலும் நிலை-குடியாத்தம் குமுறல்

பல முறை மாவட்ட நிர்வாகத்திடம்

0
68
Advertisement

வேலூர்மாவட்டம்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டும் உள்ளதால் ஒரே அறையில் பல வகுப்பு மாணவர்கள் பயிலும் அவல நிலை .
மேலும் மாணவர்கள் மரத்தடியில் பயிலும் நிலை – சுற்றுசுவர் இல்லாததால் மாணவர்கள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் ஆபத்து – கண்டுகோள்ளுமா அரசு ?

குடியாத்தம்

உள்ளி பகுதியில் 300 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது.
இதில் உள்ளி மற்றும் வளத்தூர், மற்றும் கம்முவாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் படித்துவருகின்றனர்.
இந்த பள்ளி 1948 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி பல முறை புணரமைக்கப்பட்டாலும் . தற்ப்போது இந்த பள்ளியில் இரண்டு வகுப்புகள் மட்டுமே உள்ளது.
ஒரே வகுப்பில் இரண்டு ஆசிரியர்கள் 6 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுகு கல்வி கற்ப்பிப்பதால் மாணவர்கள் பாடத்தில் கவணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மற்ற அரையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கலுக்கும் ஒன்றாக ஆசிரியர்களால் பாடம் நடத்தபடுகின்றது. மேலும்  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாத்தால் அவர்கள் மரத்தடில் கல்வி கற்க்கின்றனர்.
மேலும் பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால் மாணவர்கள் இடைவேளை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து சென்று விளையாடுகின்றனர்.
இதனால் உயிரிழப்புகள் ஏற்ப்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டிதர வேண்டும் , சுற்றுசுவர் கட்டிதர வேண்டும் என பெற்றோர்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை இல்லை என்றும் இதனால் தாங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப மறுப்பதால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்