பொன். மாணிக்கவேல்

திராவிட மடாதிபதி கீ...கீ.... வீரமணி

Advertisement
Advertisement

சசிகலாவின் ஜாதிக்காரர்  பொன்.மாணிக்கவேல்

வேலை வெட்டி இல்லாத துறை என்று நினைத்து…!  வேனில் ரோந்து போன ஒரிஜினல் போலீஸ்சை….. பிடித்து….! உள்ளே விட்டுக்கொண்ட அரசு…! 

இப்போ குத்துதே….! குடையுதேன்னு…..! கோர்ட்டில் மண்டியிட்டு மண்ணை கவ்வும் அவலம் தான், தற்போது நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரும் கொடுமையான செய்திகளில் ஒன்று…!

தவிர்க்க முடியாத வழக்குகளை ‘C.B.I., மாறலாம் என்று கோர்ட் சொன்னால்…., அதை தமிழக அரசு எப்போதும் அப்பீல் என்று எதிர்க்கும்.

சிலைக்கடத்தல்

ஆனால், ‘சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை,  தமிழக அரசே வலியவந்து C.B.I., க்கு மாற்ற வேண்டும், என்று  கோர்ட்டில் தெரிவித்தது, நீதிமன்ற வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது, இது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரிய சல….. சலப்பை உண்டாகியது.

ஆனால் ஊழல் பெருச்சாளிக்கு, அதிர்ஷ்டம், கலைஞரின் உடல்நிலை… அதை தொடர்ந்து அவரது மரணம் போன்ற செய்திகளில் தற்போது வினோதமாக மறந்து விட்டது…..!

ஆகஸ்ட் 1-ம் தேதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் C.B.I., க்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு, மறுநாளே இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, தமிழகம் முழுக்க பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னணி செய்திகள்….. அரசியல் மற்றும் உயர் மாட்டங்களை…..!
 

சும்மா அதிருதுல்ல…..! என்கிற டைப்பில்…..  ‘ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்,  சிலைக்கடத்தல் விசாரணையை மிக டெரராக நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதே….!

அனல் பறக்கும் இவரின் விசாரணை, தற்போதைய ஆட்சியையே ஆட்டம்காணச் செய்யும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், C.B.I., விசாரணை என்கிற பெயரில்.

விசாரணையையே ஒட்டுமொத்தமாக போஸ்ட்மாட் செய்யது புதைக்கத் தீர்மானித்துவிட்டனர்’ என்கிற தகவல் தற்போது கசிந்துகொண்டிருக்கிறது….. கோட்டை வட்டாரத்தில்.

  சிலை…..!  வழக்குகள் வேகமெடுத்து, அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, கூடுதல் கமிஷனர் கவிதா… என்று அடுத்தடுத்து பலர் கைதாகிவருகிறார்கள்.

இந்த லிஸ்ட்டில், மேலும் சில முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன.

சிலைகள் திருடுபோனதற்கு உடந்தை….!கோயில் திருப்பணிகளில் ஊழல்…! சிலைசெய்யும் ஊழல்….! என்ற குற்றசாட்டுக்கள் அடிப்படையிலேயே….! நடவடிக்கைகள் தொடர்ந்து, அடுத்தகட்டமாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என்று பெரிய லிஸ்ட் தயாராக இருக்கிறதாம்.?

வரும் நவம்பர் மாதத்தில் ஐ.ஜீ… ஓய்வுபெறுவதற்கு முன்பாகவே இந்த லிஸ்டில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்ய…! பொன்.மாணிக்கவேல் ரெடி.

தனது பணி ஓய்வுக்கு முன்பே, சிலைக்கடத்தல் மற்றும் முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் பொன்.மாணிக்கவேல்.

இந்த தகவல்களை காவல்துறையில் உள்ள பொன். மாணிக்கத்தின், எதிர் அணிகள் ஒன்று கூடி அதை மோப்பம்பிடித்து….! அதற்கு கண்…! மூக்கு வைத்தனர்..!
 

அதாவது  ‘சசிகலாவின் ஜாதிக்காரர்  பொன்.மாணிக்கவேல், எனவே அந்தக் குடும்பத்துக்கும் நெருக்கம். சிலைக்கடத்தல் வழக்கைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியையே கவிழ்க்க அவர் ரகசியத் திட்டம் தீட்டுகிறார்’ என்று கயறு திரித்து விட,
அது சரியாக ஒர்க்கவுட்டாகி, அரசு தரப்பில் அனைவரும் மிரண்டுவிட்டனர்.

இந்த மெரசல் காரணமாகவே தான் சிலை வழக்கை C.B.I., வசம் ஒப்படைக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ.ஜீ. பொன். மாணிக்கவேல் தேவர் ஜாதிதான் அதை யாராலும் மாற்றிவிட முடியுமா….?

பழனியில் முருகனுக்கு மொட்டை போட்ட, மோசடி வழக்கில், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் k.K.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரைக் கைது செய்தார்
பொன். மாணிக்க…..வேல்தேவர்.

இதில் Ex. இணை ஆணையர் k.K. ராஜா ஒரு ஒரிஜினல் தேவர் என்பது குறிப்பிடத்தக்கது…!

நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளால் ஐ.ஜீ., க்கு கடிவாளம் போடமுடியவில்லை என்பதுதான் உண்மை என்கிறார்கள் கறார் காவல்துறையினர்…!

நம்மிடம் பேசிய ஒரு டெரர் போலீஸ் அதிகாரி, “அந்த அம்மா ஆட்சியில் இருந்தபோது, உளவுத்துறை உயர் அதிகாரியாக பொன்.மாணிக்கவேல்  இருந்தார். அந்த அம்மாவுக்கும் சசிகலாவுக்கும் மோதல் வந்து போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்தில், இருவருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர்களில் பொன்.மாணிக்கவேலும் ஒருவர்.

ஜெயலலிதா இறந்தபிறகு சமூகரீதியாக இணைந்து செயல்பட்ட பலருடன், பொன்.மாணிக்கவேலுக்கு நட்பு உண்டு, இதையெல்லாம் வைத்து, எடப்பாடி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எண்ணத்தில், திரைமறைவில் அவர் காய் நகர்த்துவதாக கயிறு திரித்து விட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது

ஆரம்பத்திலிருந்தே உயர் அதிகாரிகளுக்கு எந்தவிதத் தகவல்களையும் தராமல், நீதிமன்றத்துக்கு மட்டுமே தந்துகொண்டிருந்தார்.

உயர் அதிகாரிகள் கேட்டபோதும் தரமறுத்துவிட்டார். இந்தக் கடுப்பில்தான், அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. 

வழக்கு விசாரணையை அவரிடமிருந்தும் பறிக்கும் வேலையும் நடந்தது. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற நிழலில் இருந்துகொண்டு, ஓயாமல் குடைச்சல் கொடுக்கவே, பொன்.மாணிக்கவேல் என்னென்ன தவறுகள் செய்கிறார் என்பதைக் கண்டறிய உயர் அதிகாரிகள் சிலர் பொன். மாணிக்கத்தேவரை கண்காணிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் “தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் மீடியேட்டர் என்று அழைக்கப்படும் ஒரு மதுரை பிரமுகர், இந்த விஷயத்தில் உளவு வேலை பார்த்திருக்கிறார். அதுவும் பொன். மாணிக்கவேல் ஐ.ஜீ., நன்கு தெரியும் என்றார் அந்த டெரர் அதிகாரி.
மேலும் அவர் கூறியதாவது:-

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.மாணிக்கவேல் பற்றி நன்றாகத் தெரியும். 

கவுண்டர் காதில் காதுகுத்தும் அல்லக்கைகளை நம்பாமல், இதைப்பற்றியெல்லாம் முதல்வரே நேரடியாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரித்திருந்தால், உண்மை தெரிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் அவசரப்பட்டு விட்டனர்’’ அதன்விளைவு…. ” ஒரு நிமிடம்கூட C.B.I., சிந்தனை அரசுக்கு வந்து விடக்கூடாது இதுவே சிறப்பு பெஞ்ச் கட்டளை…! இந்த கட்டளையை ஹரி, சிவனின் சாசனம்” என்று தமிழக அரசின் கொள்கை மூக்கை உடைத்து விட்டது நீதிமன்றம்…..!  என்றார் அவர்.

இந்த வழக்கில் ஆரம்பம்தொட்டே கடுமையாக கண்டிப்பு காட்டிவரும் நீதிபதி மகாதேவன், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலின் ஒவ்வொரு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது….!

தற்போதைய சூப்பர் காமெடியாக களம் இறங்கியுள்ளனர், அறநிலையத்துறை அலுவலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தினர்…! 
என்னமோ கோவில் காசுலே பத்துகாசு கூட ஆட்டையப் போடத உத்தமர்கள் போல் தையத்தக்க என்று எதுக்கு குதிக்கிறார்கள்…?
எல்லாம் பயம்….! மடியில் கோவில் கனம்….!

சிலை கடத்தல் வழக்கில் கைதான கவிதாவுக்காக வக்காலத்து வாங்கும் இவர்கள்…. நீதிமன்றத்தில் கவிதா பரிசுத்தமானவர் என்று நிரூபித்து….! பொன்.மாணிக்கவேலின் மூர்க்கத்தனமான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்…..! பிரஸ்மீட் வைப்பது எதற்காக…..? என்று குமுறுகின்றனர் ஒரிஜினல் கோவில் குமாஸ்தாக்கள்….!

 கவிதாவின் உண்மைத்தன்மைக்கு ஆதரவாக கொடிபிடிப்பவர்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் அவா… அவளை…!!! மட்டும், விசாரித்தால்  போது….! என்கின்றனர் குடும்மி குருக்களில் ஒருசிலர்….!

தமிழகம் ஒன்றும் ஊழலும் மோசடியும் நடக்காத பரிசுத்தமான மாநிலம் அல்ல…..! 
 

கடந்த 50 வருடமாக அது ஒன்று மட்டுமே தானே சிறப்பாக நடக்கின்றது…!நடைபெறும் சிறப்பு ஊழல்களுக்கு தண்டனை கிடைத்ததோ இல்லையோ….!

ஊழலின் வடிவமாவது கொஞ்சம் வெளிவரும், ஆனால் இந்த கோவில் சிலை மோசடிகளில் அந்த வாய்ப்பும் வந்துவிட கூடாது,என்பது அனைத்து ஆன்மீகவாதிகளின் எதிர்பார்ப்பு….!

 இதுவரை மூச் காட்டாமல் இருந்த, ராமசாமி நாயகர் ட்ரஸ்ட் மடாதிபதி கிக்கிகீ. வீரமணி திடீரென இந்த சிலை மேட்டரில் குதித்து, வழக்கம் போல் இது ஆரிய பிராமணர்கள் ஆலயத்தை கைபற்ற செய்யும் சதி சூழ்ச்சி என்று, தனது காமெடி பீஸ் டையலாக்கை அவுத்து விடுகிறார்…!.

திராவிட மடாதிபதி கீ…கீ…. வீரமணியின் காமெடி எந்த சூழலிலும் சிரிக்க வைக்கும் சக்தி உண்டு…….!

50 ஆண்டுகாலமாக அறநிலையத்துறை மாநில அரசின் கட்டுபாட்டில் தானே இருக்கிறது, திராவிட புரட்சியில் ஆரிய பார்ப்பன பிராமணர்கள் ஒடுக்கபட்டிருப்பதால், இது ஆரிய ஐயர்களின் மோசடி என சொல்லமுடியாது…..!

இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இங்குள்ளவர்களே, அதிகாரத்தில் இருந்தவர்களே அதில் மாற்றுகருத்தில்லை…!

சம்பந்தமே இல்லாமல் இது ஆரிய ஐயர் பார்பன சூழ்ச்சி என்பது எல்லாம் 23-ம் புலிக்கோசி கீகி.வீரமணியின் கிச்சுகிச்சு சிரிப்பூட்டும் ரகம்….!,

பிராமணர் கையில் இருந்தபொழுது சிலை திருட்டெல்லாம பெரிதாக நடக்கவில்லை, பழனி கோவில் முதல் எல்லா சிலைகளும் பாதுகாப்பாகவே இருந்தன…!

ஆலய ஆசாடபூதி…. அதிகாரிகள் கவிதாவிற்க்காக பொங்குவதை கண்டால் பெரும் மோசடி நடந்திருப்பது நன்றாகவே புரிகின்றது,

வழியில் பயம் அச்சம் இருந்தால் தானே….!அலறல் வரும்….!

இந்த திராவிட மடாதிபதி கீ வீரமணி என்றெல்லாம் வாய்திறக்கின்றாரோ அப்போதெல்லாம் அது, ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடும்  சாதகமான விஷயங்களாகவே இருகும், என்பதால் அதுவும் கண்டிப்பாக அதுவும் எச்சரிக்கையாக கவனிக்கதக்கது….!

மடாதிபதி வீரமணி C.B.I.,  விசாரணையினை வரவேற்கின்றார் என்பது அந்த விசாரணை ஒன்றுக்கும் உதவாது என அவர் மகிழ்கின்றார் என்பது கடந்த கால அர்த்தங்களில் ஒன்று என்பதாகும்.

ஆலயம் என்றால் ஆரிய சூழ்ச்சி என துடிப்பவரிடம், ராமசாமி ட்ரஸ்ட் மடத்தின்..! சொத்துக்களின் நிலை என்ன? வருமானம் என்ன? என கேட்டால் அவனும் ஆரிய ஐயர்களின் அடிவருடி ஆகிவிடுவான்…!

அறநிலைக்கு போதாத நேரம் அதனால்தான் என்னவோ பொன். மாணிக்கம் தனது வேலாயுதத்தின் கூர்மையை  எல்லோரும் மீதும் பாய்ச்சிடுகிறாரோ என்னவோ…!

எது எப்படியோ….!  காலம் நடந்த மோசடிகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன, அதனை பொறுக்கமுடியாமல் கவிதா நிரபராதி என ஒப்பாரி வைக்கின்றார்கள்….!

அன்பான ஆன்மீக…  அறநிலையத்துறை அலுவலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தினர்களே…! 

இப்போது  ஒன்றும் அவசரமில்லை வழக்கு நடக்கட்டும், நீதிமன்றம் அதன் கடமையினை செய்யட்டும்….!

உண்மையில் நீங்கள் கூறுபவர்கள்…! உத்தமராக இருந்தால் நீங்கள் சம்பளம் வாங்கும் பக்தர்களின் காணிக்கை அவர்களை கண்டிப்பாக காப்பாற்றும்….!

நல்லவர்களை கடவுள் சோதனை செய்வான்….! ஆனால் கைவிடமாட்டான்னு நம்ம சூப்பர் ஸ்டார்நடிகர் ரஜினிகாந்தே சொல்லிவிட்டார்…!

கண்ணா….! கோவில் சொத்தை திருடிய எவனும் வாழமுடியாது…..!
அப்படியே திருடி வாழ்ந்தவன் நிம்மதியாக சாகவும் முடியாது…! என்பது சரித்திரம்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119