கோதாபாயவை கைது செய்ய மைத்திரியின் அனுமதிக்காக காத்திருக்கும் காவல்துறை

ஊழல் விசாரணைகள்

0
186
Advertisement
Advertisement

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்று இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

90 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தி, தனது பெற்றோருக்கு நினைவிடம் அமைத்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் விசாரணைகள்

இந்த விசாரணைகள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிபரின் அனுமதிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

ஊழல் விசாரணைகள் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை  கைது செய்வதற்கு அதிபரின் அனுமதி காவல்துறைக்குத் தேவை என்றும், உயர்மட்டக் கைதுகள் விடயத்தில்  இது வழக்கமான நடைமுறை என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.

அதேவேளை, இந்த விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும், முற்றாக விலகி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களமும், காவல்துறையும் தமது பணிகளை சுதந்திரமாக செய்ய வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையிலேயே அதிபரின் அனுமதியை காவல்துறையினர் கோரியுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோதாபாய கைதாகவிருந்த சந்தர்ப்பத்தில் அதிபரின் தலையீட்டையடுத்தே அவரின் கைது நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்

SHARE