பாமகவினர் நூதன போராட்டம்-வேலூர் மாவட்டம்

பாமக

0
213
Advertisement

நூதன போராட்டம்

Advertisement

மின்சார வாரியத்தின் அவல நிலையை கண்டித்து வாய் மற்றும் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பாமகவினர் நூதன போராட்டம்.

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி பூம்பள்ளம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக முறையான மின்சார வசதி செய்த புதுப்பேட்டை துணை மின்நிலையம் வாயில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கண்களிலும் மற்றும் வாயில்  கருப்பு துணி கட்டிக்கொண்டு நூதன முறையில் தர்ணாவில் அமர்ந்து ஈடுபட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள புதுக்பேட்டை துணை மின்நிலையத்தின் மூலம் வெலக்கல்நத்தம் ஊராட்சியில் மின் தாங்கி அமைக்கப்பட்டது.

அதன்  மூலம் தினமும் இரு வழி மின்சார வழங்கியது. திடிரென பூம்பள்ளம் பகுதியில் உள்ள மின்சார தாக்கி பழுது ஆனது. அதை சரி செய்ய பல முறை புதுப்பேட்டை துணை மின்நிலையம் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது வெயில் காலம். பூம்பள்ளம் பகுதியில் விவசாயம் சிறப்பாக செய்யபடுகிறது.மற்றும் குடிநீருக்காக பொதுமக்கள் தினமும் ஆள்துணை கிண்றுகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த மின் தாக்கி பழுது பார்க்காமல் அதிகாரிகளின்  மெத்தனப் போக்கால் இன்று பொதுமக்கள் மற்றும் கால்நடைகளும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரின் தொகுதியில் இந்த அவல நிலை என்றால் மற்ற தொகுதிகளின் நிலவரம் எப்படி இருக்கு உடனடியாக தமிழக மின்சார வாரியம் மின் தாக்கியை பழுது நீக்கி பொதுமக்களின் அவல நிலையை போக்க வேண்டும் என கூறினார்.

SHARE
Rj suresh
வேலூர்