தெய்வத்திருமகன் தேவர்…புளிச்சிகுளத்தில் ஏன்? மவுனம் காத்தார்…

31
931
Advertisement
Advertisement

பூலித்தேவன், மருதுபாண்டியர், வெள்ளையத் தேவர், பாண்டித் துறைத் தேவர் எனும் வீரமறவர்களின் வழி வந்த மரபின் மறுமலர்ச்சி பசும் பொன்னரின் பாத கமலத்தில் நமது “தமிழ் செய்தி” யின் வீர வணக்கங்களை பக்தியிடன் பதிவு செய்வதில் பெருமிதம் அடைகிறோம்.
தேசத்தையும்.. தெய்வத்தையும்… ஒன்றாக போற்றிய உத்தமர் தேவர்.

32 1/2 கிராமங்களுக்கு சொந்தக்காரராக இருந்து,ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தும் கதர் ஆடைகளையே அணிந்து மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.
உலக அரசியல் வரலாற்றில் தனக்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் சாதி,மதம் பாராமல் ஏழை எளிய மக்களுக்கு எழுதி பத்திரபதிவு செய்துக் கொடுத்த ஒருரே அரசியல் தலைவர்.
தன்னுடைய கடவுச்சீட்டில் தன்னை விவசாயி என்று குறிப்பிட்டுள்ள ஒருரேஅரசியல் தலைவரும் இவரே.

போராட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்,திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம்,கமுதி மீனாட்சி அம்மன் ஆலயம்,திருவிதாங்கூர் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் நாடார் சமூக மக்களை அழைத்து சென்றவர்.

23 தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்தவர் தேவர் அவர்கள்.

குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டம்,ஆலய நுழைவு போராட்டம்,ஜமீன் ஒழிப்பு போராட்டம்,கள்ளுக்கடை மறியல்,சுதந்திர போராட்டம்,விவசாயிகள் போராட்டம்,தொழிலாளர்கள் போராட்டம் ஆகிய போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றிகண்டவர்.

அரசியல் மேடையில் ஆன்மீகத்தையும்,ஆன்மீக மேடையில் அரசியலையும் கலக்காமல் முழங்கியவர்.

பன்முக தோற்றத்தை கொண்ட ஒரு அரசியல் தலைவரான தேவர்.

தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்கொண்ட ஒருரே அரசியல் தலைவர் என்றால் மிகையாகாது.
பணம்… புகழ்… ஆடம்பர…செல்வாக்கு
கொண்ட அரசியல் களத்தில், கொண்ட கொள்கையில் உறுதிபட நின்றவர்.

தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்ணாசைகளை முற்றிலும் துறந்த ஒருரே அரசியல் தலைவர் தேவர் மட்டும் தான்.

தனது வாழ்நாளில் எந்த இடத்திலும் யாரையும் சார்ந்து தேவர் ஒருபோதும் இருந்தது இல்லை.

அரசியல்வாதிகளில் ஒரு அரசனைப் போல் உண்மையான வீரமறவர்…  சிலம்பம்,குதிரை ஏற்றம்,மற்போர்,துப்பாக்கி சுடுதல்,வர்ம கலை ஆகியவை கற்று தேர்ந்தவர்.

பதவி,பணம் மீது பற்று கொள்ளாத ஒரு அரசியல் தலைவர்

நேதாஜி இறக்கவில்லை என்று கூறிவந்த ஒருரே தலைவர்.

கன்னியாகுமரியில் வீரத் துறவி விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் தேவர் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.

மக்கள் தலைவராகவும்,தெய்வமாகவும் ஒருவரை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றால் தேவர் அவர்களை மட்டும் தான்.

எந்தவிதமான தேர்தல் வேலைகளும் செய்யாமல்,போட்டியிடும் தொகுதிகளுக்கே கூட செல்லாமல்,ஒரு பைசா கூட செலவு செய்யாமல் மக்கள் சக்தியை மட்டுமே நம்பி தேர்தல்களில் நின்று மாபெரும் வெற்றிபெற்ற “தென்பாண்டிச் சிங்கம்”.
சட்டசபைக்கு 1946-ல் போட்டிகள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் பெருமகனார் இரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்தார்.

அந்த காலகட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் பதவிக்காக மந்திரிசபையில் மடிப்பிச்சை கேட்டு  மண்டியிட்ட நேரத்தில்…!தேவருக்குத் தொழில் மந்திரி பதவி தேடிவந்து.
அதையும் துறந்துவிட்டு… 1948- வரை இரண்டு ஆண்டு காலம் “புளிச்சி குளத்தில்”  ஏன்? மவுனம் காத்தார்… என்பது தேவருக்குதான் வெளிச்சம்.

புளிச்சி குளம்” நகர… ஏன் கிராம வாசனை கூட இல்லாத ஒரு விதமான புனிதம் நிறைந்த இடம்.
கமுதி செல்லும் வழியில் உள்ள அபிராமத்திலிருந்து வீரசோழம் மார்க்கமாக 15 கிலோமீட்டர் பெரிய குளக்கரை அருகே உள்ளது.(பசும்பொன் வரும் பக்தர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய ஸ்தலம்) புளிச்சிகுள எஸ்டேட்டில் இருந்த  அந்த இரண்டாண்டுகளில் எந்த அரசியல் நிகழ்வுகளின் கலந்து கொள்ளாமல் இருந்தவர்.

புளிச்சி குளம்…. மவுனம் களைந்த போது பார்வார்ட் கட்சி காங்கிரசிலிருந்து, தனிக் கட்சியானது.
அந்த காலகட்டத்தில் தேவரின் போராட்டத்தின் வெற்றியாக… சி.டி.ஆக்ட் ஒழிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து ஆறேமாத்தில் பத்திரிக்கை ஆசிரியரானார் அது தான் “நேதாஜி ” வார இதழ்.
நேதாஜி வார இதழ் இந்தியா பத்திரிக்கை வரலாற்றில் தனி முத்திரையை பதித்ததாகும்.
ஆம் பத்திரிக்கை தொடங்கிய அன்று இரவு மதுரை தமுக்க மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேவரின் எழுச்சியுரை கேட்க, 3 லட்சம் பேர்கள் கூடினார்கள் என்று போலீஸ் டைரிக்குறிப்பில் உள்ளது.

கூட்டம் கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் ஆனதாம்.
கூட்டி… கழித்து பார்க்கையில் இந்த மாபெரும் எழுச்சி நிகழ்வுக்கு…. தேவரின் புளிச்ச குள மவுனத்தின் தவமாகக்கூட இருக்குமோ..?

புளிச்சி குளத்தில் தேவர் தவம் இருந்த, எஸ்டேட் மாடி வீட்டில் அரியவகை படங்கள் தேவர் பயண்படுத்தி அரும் பொருட்களையும் தரிசிக்கலாம்..! மேலும்
புளிச்சி குளக்கரையில்  தேவர்பெருமகனார்
ஸ்தாபிதம் செய்து, வழிபட்டு வந்த “பஞ்ச கஜமுக கணபதியின்” வாகனம் சிங்கம்…. என்பது குறிப்பிடத்தக்கது..!

சங்கரமூர்த்தி, 7373141119

SHARE