பார்சல் கஞ்சா ….பரமக்குடியில் பரபரப்பு விற்பனை

காவல்துறை

0
183
Advertisement

கஞ்சா விற்பனை

Advertisement

பரமக்குடி நகர் பகுதிக்குள் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

தாரளமாக கிடைக்கும் கஞ்சாவை பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி உட்கொண்டு மயக்கத்தில் தள்ளாடிய படியே ரோட்டில் செல்கின்றனர்.

கஞ்சா விற்பனை செய்பவர்கள் தங்கள் பெயரில் பார்சல்களை அனுப்ப சொன்னால் மாட்டிக்கொள்வோம் என்கின்ற பயத்தில் பரமக்குடி நகரில் உள்ள பிரபல வியாபாரத்தளங்கள், தனியார் பள்ளிகளின் பெயர்களில் பரமக்குடிக்கு பார்சல்களை வர செய்துள்ளனர்.

அதன் படி வரும் பார்சல்களை பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கும் முன்னர் கஞ்சா விற்பனையாளர்கள் தாங்களே பார்சல் சர்வீஸ் நிறுவனங்களுக்கு சென்று பார்சல்களை பெற்று சென்றுள்ளனர்.

இச்செயல் தொடர்ந்து அறங்கேறிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடியில் பிரபல தனியார் பள்ளியின் பெயரில் மதுரையிலிருந்து பார்சல் வந்துள்ளது என பள்ளி நிர்வாகத்திடம் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தினர் ஒரு பண்டலை ஒப்படைத்தனர்.

காவல்துறை

அந்த பண்டலை பெற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகம் பண்டலை பிரித்து பார்த்த போது, அதில் புகையிலை வாசம் வந்துள்ளது. உடனே, பார்சல் சர்வீஸ் நிறுவனத்திடம் பள்ளி நிர்வாகம் பண்டலை இது எங்களுக்கு வந்த பார்சல் இல்லை என ஒப்படைத்துள்ளனர்.

பார்சல் சர்வீஸ் நிறுவனத்தார் பண்டலை வாங்க மறுத்ததால், வேறு வழியின்றி பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் எங்கள் பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். காவல்துறை சார்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து விசாரணை மேற்க்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வெகு நாட்களாகியும் பெற்றுச் செல்லாத நிலையில் உள்ள பார்சல்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டனர்.

அதில், மதுரை முகவரியிலிருந்து வரும் பார்சல்களில் முழுமையான முகவரிகள் இல்லாத பார்சல்களை கைப்பற்றி பரமக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பரமக்குடி வேந்தோனி கிராமத்திற்கு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்த மங்களநாதன் மகன் முத்துக்குமார் (25), கருப்பையா மகன் அரசபாண்டி(56), வேந்தோணி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் காளிமுத்து (47), முத்துச்சாமி மகன் கர்ணன்(19), பரமக்குடியை சேர்ந்த வெள்ளைத்துரை மகன் முத்துக்குமார் (33), ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ஒன்றரைக்கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
sm muthukumar
பரமக்குடி