பிள்ளையப் பெத்தா கண்ணீர்…! தென்னை வச்சா பன்னீரு….இன்று என்ன ?

0
309
Advertisement
Advertisement

ஆனால் தென்னை சார்ந்த உபதொழிலில்களில் ஒன்றான தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரிக்கும் தொழில்செய்து கண்ணீர் விட்டவர்கள் ஏராளம்.

நார்கழிவுகளால்….. பல சவால்களையும், சங்கடங்களையும், சந்தித்தவர்களில் பலர் போலீஸ் கோர்ட் வழக்கு வாய்தாக்கள் என்று  அனுபவித்தவர்களுக்கே அதிகம்.

காரணம் எளிதில் மாக்காத கழிவுகளில் ஒன்று தென்னைமட்டை நார்கழிவு.

பொதுவாக நம் நாட்டில் உற்பத்தியாகும் தேங்காயிலிருந்து கிடைக்கும் நார் கழிவானது சீரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டது.

பெரும்பாலும் நார் கழிவுகளை தொழிற்சாலைகள் அருகே மற்றும் சாலையில் பெருங்குவியலாக போடப்பட்டும்,  நெருப்பு வைத்து சுற்றுப்புற சூழலை பெரிதும் பாதிக்கப்படவைத்த போது தான்.

வழக்கு…வாய்தா….. கோர்ட்….போலீஸ்….! என்று கயர் தொழில் கதறியது.

அந்த சோகத்துக் முற்று புள்ளி வைத்தாகிவிட்டது என்பதை முனைவர் அ.பரணியின் விரிவான விளக்கத்தில் தெரிந்துகொண்டோம்.

ஆம்..! கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய….ஆர்கானிக் பயிலரங்கத்தில் நாமும் கலந்துகொண்டு தெரிந்தது கொண்டோம்.

ஆர்கானிக் ஆர்வலர்களிடம் வகுப்பெடுத்த முனைவர் அ.பரணி கற்பித்தது என்னவென்றால்:-

தென்னை நார் கழிவில் எளிதில் சிதைவடையாத லிக்னின் (LIGNIN), செல்லுலோஸ், கரிமம் உள்ளன.

தென்னை நார் கழிவு நிலத்தில் மக்கும் பொழுது தழைச்சத்தின் அளவு குறைகிறது எனவே,  உயிரியல் முறையில்  மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.

தென்னை நார் கழிவை மக்க வைப்பதற்கு பசுமாட்டின் சாணம் சிறந்தது. மேலும் எளிதில் மக்கிவிடாத லிக்னின் நரம்புகளை எளிதாக சிதைத்தது உரமாக்க,” நுண்ணுயிர் கூட்டுக்கலவை” உள்ளது.அதை பயன்படுத்தி குறுகிய நாட்களிலேயே நல்ல ஊட்டசத்து கொண்ட உரம் தயாரித்து விடலாம்.

நிழலடியில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு தொட்டி அமைத்து கனிசமாக ஈரத்தை தொடர்ந்து பராமரித்து மக்க விட வேண்டும்.சுமார் 30 முதல் 45 நாட்களில் நன்கு மக்கிய எரு தயாராகி விடும்.

இதனை பயன்படுத்துவதால் களிப்பாங்கான மண்ணில் இறுக்கத் தன்மையை குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரித்து பயனளிக்கிறது.

மணற்பாங்கான மண்ணிலும் மற்றும் “மானாவாரி” நிலங்களிலும் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தி மண் வளத்தை பெருக்குகிறது.

களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலை கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலை கூட்ட வல்லது.கழிவு பொருட்களை மக்க செய்து எருவாக்குவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

ரசாயன கழிவுகளால் நஞ்சாகி மலடான, மண்ணையும்  பொன்னாக்கும் தென்னை நார் கழிவை பயன்படுத்தி விவசாய…. பயிர் விளைச்சலை பெருக்கலாம், மேலும் கார்பன் நிறைந்த இந்த உரம் “வானம் பார்க்கும் மானாவாரி விவசாயத்திற்கு’ மிகச்சிறந்தது என்றார் முனைவர்அ.பரணி

SHARE