நமது எம்.ஜி.ஆர்….! நமது அம்மா…! சித்தரகுப்தன் எந்த பக்கம்….?

388
1701
Advertisement
Advertisement

ஒரிஜினல் அ.தி.மு.க., நீயா…? நானா…?

எனும் குழாய் அடி குடுமிபிடி குத்து சண்டை… நாற்றம் கூவத்தையும் மிஞ்சிய நாற்றத்தில் நாடே சிரிப்பாய்… சிரித்து கொண்டு இருக்கிறது.

இந்த நாற்றத்தில் நமது எம்.ஜீ.ஆர்., நாளேட்டில் பணியாற்றிய… என்பதை வீட  பாடுபட்ட ஆசிரியர் சித்தரகுப்தனையும் விட்டுவைக்வில்லை, என்று நமது ஒற்றர் ஓலை வாசித்தார்.

மேலும் நமது ஒற்றர் நம்மிடம் ஓதியதாவது…

புரட்சி தலைவியின் உண்மையான ஒரிஜினல் போர்வாள் சித்தரகுப்தன் தான் என்பதை எவறும் மறுக்க முடியாது…… 

ஜெயாவின் எண்ணங்களை எழுத்தாக்கி நமது எம்.ஜீ.ஆர்., நாளேட்டில் முத்தாக அச்சிட்டவர்.

அம்மாவின் மனசாட்சிக்கு துப்பாக்கி ஏந்திய  போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.காவினரே அன்று பிரமித்த ஒரே பத்திரிக்கை ஆசிரியர் தான் இந்த சித்தரகுப்தன்…! என்றார் நமது ஒற்றர்…!!

அதுக்கு என்ன இப்போ… ஒற்றரே..? அப்படிப்பட்ட அம்மாவின் குரலை…. கருப்பு ஆடு என்று…..!  அதுவும் பிரஸ்மீட் வைத்து அவமானம் செய்யும் அளவுக்கு சித்திரகுப்தன் செய்த குற்றம் தான் என்ன? என்றோம்.

கவி… கட்டுரைக்கு… காவடி தூக்க தினகரன் எடுத்த அவசர முடிவு என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தாலும்…. உண்மையான உள்குத்து வேறு….?

அது என்ன… உள்குத்து ஒற்றரே..?

அந்த மேட்டர் இப்போது வேண்டாம்….  நான் வந்த மேட்டரே வேறு..! என்று ஜகா வாங்கினார் நமது ஒற்றர்…!

அது என்ன புது மேட்டர்..?

உண்மையை….. மட்டுமே திரிக்கும் தீபா மலர் இன்னைக்கு ஒன்றை திரிச்சு விட்டிருக்கு
“நமது அம்மா” T.V., மற்றும் நாளேடு…  இதுக்கு ஆசிரியர் நம்ம சித்தரகுப்தராம் இது குறித்து எடப்பாடியார் பேசி முடிவு செய்து விட்டாருன்னு…. திரிச்சு இருக்கிறது…! என்றார்

நல்ல விசியம் தானே…? என்றோம்

என்ன நல்ல விசியம்..? மோடியை எதிர்த்த லேடியின் ஒரிஜினல் போர் வாள்… சித்தரகுப்தன்…!எப்படி..? மோடி அ.தி.மு.க.வுடன் பயணிக்க முடியும்.

மேலும் இன்று வரை “நமது எம்ஜிஆர்” ஆசிரியர் சித்தரகுப்தன் திருநாமத்தில் தான் வெளிவந்தது கொண்டு இருக்கிறது….!

சசிகலா குடும்பத்தினரை ஒட்டு மெத்தமாக கருப்பு ஆடுகள்…. இந்த ஆட்டு மந்தைகளிடம் எவரும் தொடர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தலைப்பு செய்தியாக போட்டவர்…. சித்திரகுப்தன்..!

இதுக்காவே அன்று சித்தரகுப்தனுக்கு இரட்டை பதவிகளை ஜெயலலிதா வழங்கினர்.

அந்த…. கருப்பு செய்திகள் சசிகலா குடும்பத்தினரை இன்றளவும் நீர் பூத்த கடுப்பாய் உள்ளது…..!.

எடப்பாடியின் தீர்மானத்திற்கு தினகரனின் பதில்..!

நாம்….உடனே இடைமறித்து  ஓ… அத்த கடுப்புலேதானே, தினகரன்… சித்தரகுப்தனின்  ஆசிரியர் பதவியை பறித்தது பலி தீர்த்துக் கொண்டாரா.? என்று கேட்டதற்கு.

டென்ஷனாகிய நமது ஒற்றர்…. இது தானே வேண்டாம்… அந்த மேட்டரை நேரம் வரும் போது நானே சொல்கிறேன்…. என்று முற்று புள்ளி வைத்து விட்டு தொடர்ந்தார்..

காரணம் இல்லாமல் அவசர கதி அவதியில் காவடி தூக்கி துவண்டு போன தினகரன் குருப்…. சித்தரகுப்தனிடம்… மறப்போம்…. மன்னிப்போம் என்று தூது விட்டுக் கொண்டிருக்கிறதாம்…! இப்போது.

இது எப்படி உமக்கு தெரிந்தது ஒற்றரே..?

நமது எம்.ஜி.ஆரில் எனக்கும் ஒரு சிலீப்பர் செல் இருக்கு..ஜென்டில்மேன்.என்று சொல்லிவிட்டு பறந்தார்.

ஓகோ …! நமக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம்….. O.P.S…, E.P.S…, என்று இரண்டு PS களிடம் பேசும் ஜெயலலிதாவின் ஆன்மா ஏன் சித்ரகுப்தனிடம் பேசவில்லை என்பது மட்டும்தான்.

அப்படி பேசினால்…. புரட்சித்தலைவி காத்து வந்த அம்மாவின்  போர் வாள் யார் கையில் சுழலும் என்பதை காலம் தான் செல்ல வேண்டும்.

 

பன்னீர்ஒற்றரும்…! தோழரும்….!

SHARE