புற்றீசலாய்… புறப்பட்ட ஆர்கானிக்….! வர்த்தக அவலம்…2

ஆர்கானிக் உணவுப் பொருட்கள் நமக்குச் செய்யும் நன்மைகள் என்னென்ன?

Advertisement
Advertisement

ஆர்கானிக்…! இது இன்றய நவ நாகரீகத்தின்… ஒரு மாடல்.. சொல்லாட்சியை தோற்றிவிட்டது…!

‘ஆர்கானிக்’ எனும் வார்த்தைக்கு மரியாதை பெருகிவருகிறது காரணம்..?
ரசாயன விஷக்கலப்பு உரங்களினால் உருவாகும் விவசாய உற்பத்தியில் கிடைக்கும், விளை பொருட்களை தவிர்த்து.
இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்ண வேண்டும்.
அதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது’ என்கிற விழிப்பு உணர்வின் வெளிப்பாடுதான் காரணம்.

இது உண்மையில் வரவேற்கத்தக்க விஷயமே! ஆனால்..? ஆர்கானிக் எல்லாம்…. ஆர்கானிக்தானா..? என்கின்ற அச்சம் கூடவே எழுகிறது.
காரணம் நேர்மையான வியாபாரிகள் மிக..மிக குறைவு.

ஆர்கானிக் உணவுகளை எங்கு வாங்குவது?

நாம் வாங்கும் உணவு இயற்கை விவசாயத்தில் விளைந்ததுதான் என்று எப்படி உறுதிபடுத்திக்கொள்வது?

ஆர்கானிக் உணவுப் பொருட்கள் நமக்குச் செய்யும் நன்மைகள் என்னென்ன?

அவற்றுக்கு நாம் கொடுக்கும் விலை நியாயமானதுதானா?

தமிழ் செய்தி

இப்படி பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகப் நமது ” தமிழ் செய்தி” நிருபர்கள் குழு பல விதமான ஆய்வுகளில் உண்மை தன்மையை விரிவாக தொகுத்து வருகிறார்கள்..!

அதில் ஒரு பகுதியாக கலப்படத்தை எப்படி கண்டறிவது என்பதும் அடக்கம்.

இன்றைய அதீ நவீனத்துவம் வாய்ந்த மருத்துவத்திற்கும் அடங்காத, நோய்களுக்கான காரணி….?  “நோய் எதிர்ப்பு இல்லாமை” என்பதை மருத்துவம் ஒத்துக் கொண்ட மில்லியன் டாலர் உண்மைகளில் ஒன்று…!

ஆர்கானிக் எனும் இயற்கை சாகுபடி உணவுப் பொருட்களில், “நோய் எதிர்ப்பு” எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது.

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விளைவிக்கப்பட்ட பொருட்களை ஒருவர் தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சத்துகள் இல்லாமல் போகிறது. இதனால், ஹார்மோன் பிரச்னைகள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கல்லீரல் மற்றும் கிட்னி தொடர்பான தொற்றுநோய்கள் கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், கரு கலைவது, புற்றுநோய் என பலவிதமான தீமைகள் வருகின்றன.

இதனால்தான், இயற்கை……  உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றன.

உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக் கொண்டால் போதுமா.. அது எந்த அளவுக்குப் பயன் தரும்?

சுற்றுச்சூழல் கெட்டு மாசுபட்ட இந்த பிரபஞ்சத்தில்… இது நியாயமான சந்தேகம் தான்!

காற்றின் மூலம் குறைந்த அளவு விஷமே நம் உடலில் சேரும்…  குடிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்திக் குடிக்கலாம்

 உணவு என்பது, நம் உயிருக்கும்ஆரோக்கியத்துக்கும்அத்தியாவசியமானது. காற்று, தண்ணீர் போன்ற காரணிகளால் ஏற்படும் நோய்களுடன் போராட…! நோய் எதிர்ப்புச் சக்தியை நம் உடலுக்குத் தருவது உணவு மட்டும் தான்….!

எனவே  ரசாயன கலப்பு இல்லாத  இயற்கை உணவை நாடுவது, மற்ற பிரச்னைகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய அரணாக அமையும்.
இயற்கை உணவு பொருட்களை எங்கே..? எப்படி தேடுவது..?

 அடுத்து வரும் இயற்கை தேடலில் பார்க்கலாம்…

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119