ஊட்டி அணை..! சாத்தியமா..? பதில் இல்லாத மர்மம்..

கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. 

Advertisement

ஊட்டியில் அணை கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..!

Advertisement

தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! என்று நீண்ட நாட்களாக பரபரப்பான செய்தியாக மட்டுமே இது இருந்து வருகின்றது மேலும்

நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும்.

கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது.
இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது என்றும்.

விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த பிரச்னையை தமிழக இளைஞர்கள் கையில் எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இனியாவது தமிழக அரசு  புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர் என்று, வலை தளத்தில் வலம் வரும் இந்த பதிவு நடைமுறைக்கு சாத்தியமா..?

இந்த செய்திக்கு இன்று வரை ஆம்..! இல்லை …! 
என்று எவரும் பதில் செல்லாத மர்மம் தான் என்ன..?

செய்திகள் :- குரங்கி

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119