நீட் தேர்வால் இந்த ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட்…!

43
532
நீட் தேர்வால் இந்த ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட்...!
Advertisement

நீட் தேர்வால் இந்த ஆண்டு ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட்…!

Advertisement

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு,

அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,700-க்கும் மேற்பட்ட,

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றனர்.

ஒரு பங்கு இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் கூறியுள்ளதாவது,

‘கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மதிப்பெண்படி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் படித்த 30 முதல் 35 மாணவர்கள் வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.

இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 3 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

SHARE