எரிசாராயம் கடத்தல்…வேலூர் அருகே ஒருவர் கைது

ராணிப்பேட்டை மதுவிலக்கு

0
138
Advertisement

வேன் பறிமுதல்..

Advertisement

வேலூர் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனால உத்தரவிட்டு சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டது.

இதனை அடுத்து சிறப்பு காவல் படையினர் காவேரிப்பாக்கம் அருகே வாகன தனிக்கையில் ஈடுப்பட்டனர் அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி வந்த்த  மினி வேனை சோதனையிட மறித்தனர்.

காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி வேனை தொடர்ந்து வேகமாக ஓட்டி சென்றதை அடுத்து வாலாஜாபேட்டை சுங்க சாவடி அருகே வாணி சத்திரம் பகுதியில் தொடர்ந்து சென்று சிறப்பு காவல் படையினர் மனி வேனை மடக்கி பிடித்தனர்.

வாகணத்தை ஓட்டி வந்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த விஜி் என்கிற விஜயன் என்பதும் இவர் சென்னையிலிருந்து ஆற்காட்டை அடுத்த விஷாரம் பகுதிக்கு எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது மேலும்  இவர் மீது ஏற்கனவே எரிசாராயம் தொடர்பான வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

வேனை சோதனையிட்ட போது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன் சுமார் 875 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து  எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு விஜி் என்கிற விஜயன கைது செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

 

SHARE
Rj suresh
வேலூர்