திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலூரில் கல்லூரி தொடங்க பரிசீலனை

வேலூரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை

0
255
Advertisement

அறங்காவலர் குழு தலைவர்

வேலூரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் தெரிவித்தார்.
வேலூர்:
‘திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை’ என்று அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் தெரிவித்தார்.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி.ஐ.டி.யின் (சென்னை) துணைத் தலைவருமான சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் வேலூர், டெல்லி ஆகிய 2 இடங்களில் தான் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இப்பள்ளியில் படித்தவர்கள் பலர் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். பள்ளிக்கு தேவையான வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கை திருட்டு போகவில்லை. திருட்டு போனதாக அர்ச்சகர் கூறுவது பொய். அவர் பணியில் இருக்கும்போது கூறவில்லை.
ஓய்வுபெற்ற பின் ஏன் புகார் கூறுகிறார்?. மேலும் அவர் சென்னை, டெல்லி போன்ற பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பேட்டி அளிக்கிறார். அருகில் இருக்கும் எங்களிடம் ஏன் அவர் புகார் கூறவில்லை? என்று தெரியவில்லை. தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 1952-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் சரியான முறையில் உள்ளது. புகார் கூறினால் ஏழுமலையான் தண்டிப்பார்.
தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.79 கோடி செலவில் தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது. 2 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதியோர் செல்ல, பேட்டரி கார்கள் அதிகப்படுத்தப்படும். வேலூரில் தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை செய்யப்படும். பக்தர்களுக்கு வழங்கும் லட்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்