அசைவ பிரியர்களுக்கு…எச்சரிக்கை…

பென்சேசாயட் என்ற ரசாயணபொடி

Advertisement

மொய் மீன்

Advertisement

பச்சைக்காய்கறிகளின் ஆரோக்கிய அருமைகளை மறந்த நம்மவர்களில் பலர், அசைவ உணவுகளை கடித்துக்குதறி… ரசித்து ருசிக்க ஆரம்பித்ததும்….!

வர்த்தக கொள்ளையர்கள் கோழிக்கறியை ஊக்குவித்து, கோழி வளர்ப்பில் அபிவிருத்தி என்று ஆரோக்கியத்திற்கு ஆப்பு அடித்தனர்.

விழித்துக்கொண்ட ஒருசிலர், மீனுக்கு தடவினார்கள்.

அதிலும் மொய் மீன் என்ற பொய் மீனை சந்தைப்படுத்தினார்கள்.
அரசு அதையும் தடை செய்தது.

அசைவத்தை அசைபோட்டு அடிமை பட்ட நாக்கு
மீனே கதி என்று ஆனது.தற்போது மீன் பிடிக்க தடை காலம்,
இந்த தடை நீங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீன், நண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

போதிய அளவு மார்க்கெட்டிற்கு கடல் மீன் வராததால் குளம், ஏரி, மற்றும் டேம் (அணைகட்டு) களில், பிடிக்கப்படும் கெழுத்தி, கெண்டை, வளர்ப்பு கடல்,ரோகு மீன்களை வாங்கி மீன் வியாபாரிகள் விற்கின்றனர்.

இதனால் இவற்றின் விலையும் தற்போதுவிர்றென்று  கடுமையாக உயர்ந்துள்ளது. ஜூன் 14ம் தேதிக்கு பின்னரே மீன்கள் விலை கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் விலைஉயர்ந்த மீன்கள்,
கெடாமல் இருக்க , ஒரு வித வெள்ளை பவுடர் தூவப்படுவதாக பரவலான புகார் எப்போதும் மீன் மார்கெட்டில் உண்டு.

இதுபற்றி கேட்டால் உப்பு பொடி என்று கூறி சசமாளிப்பார்கள்.
ஆனால் மீன்கள் மீது தூவப்படுவது பல வித நோய்களை உருவாக்கும் சோடியம் பென்சேசாயட் என்ற ரசாயணபொடி, இந்த பவுடர் தூவப்படுவதால் மீன்கள் கெடாதது போல் காட்சி தரும். இதனால் 15 நாட்கள் வரை ஆன மீன்களை மீன்பிரியர்கள் தலையில் வைத்து கட்டப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் டெல்லி மீன் மார்கெட்டில், விலை உயர்ந்த மீன்கள் கெடாமல் இருக்க, பிணங்களுக்கு போடப்படும் ரசாயனங்கள் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, என்பது குறிப்பிட்டத்தக்கது.

 எனவே ஓட்டல்கள் மற்றும் உணவு தயாரிப்பு தொழிற்சாலைகளில் உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்வது போல மீன்டும், மீன் மார்க்கெட்டுகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

தற்போது காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கும் என தெரிந்தும் சிலர் சிக்கனை வாங்கி உண்கின்றனர்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119