அன்னமிட்டவர்கள் வீட்டில் அடுப்பு எரியவில்லை -திண்டாடும் திரையுலகம்

தமிழ்செய்தி

Advertisement

திரை உலகில் வேலைகள் நிறுத்தப்பட்டது….!

Advertisement

திரைப்படம் தொழிலாளர்கள் போராட்டம்…! என்கிற செய்திகளை, பொதுமக்கள் பெரியதாக எடுத்துக்கொண்டு கவலைப்படுவதில்லை…!
காரணம்….?  கனவுத் தொழிற்ப்போடையில் உள்ள அனைவரும் கருப்பு பணத்தில் மிதப்பவர்கள் என்பது பொதுவான கருத்து…!

ஆனால்  திரைக்குப்பின் தேங்கிய வேதனைமிக்க சோகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் அறிந்து கொள்வதில்லை….!
காரணம் திரை நட்சத்திரங்களின் பந்தாக்களே..!

இரண்டு மணி நேரத்தில் மட்டுமே வெள்ளை திரையில் துள்ளியோடி மறையும், கனவுத் தொழிலுக்குள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் ….!
அதில் பலர் தினக்கூலித் தொழிலாளர்கள்….!

அவர்களுக்கு வேறு எந்தவொரு வேலையும் தெரியாது….!
இதில் எங்களின் திரைப்படத் தயாரிப்பு உதவித் தொழிளார்களின் அவதியை என்னவென்று சொல்வது என்றார் ஒரு மூத்த திரைப்பட ஊழியர்..!

இது குறித்து “தென்னிந்திய சினி & டிவி தயாரிப்பு உதவி நிர்வாக  ஊழியர்கள் சங்கத்தின்  தலைவர் சந்தரனிடம் விபரம் கேட்ட போது அவர் நம்மிடம் கூறியதாவது:-

திரைஉலகின்போராட்டத்தில்காரணமாகஎங்களின்தொழிலாளத்தோழர்கள்
பல வகையில் பாதிக்கப்படுவது உண்மை தான்.

வேலைகள் இருக்கும் நாட்களில் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு கொடுத்து உபசரித்து ஊழியம் செய்யும் அன்னமிடும் எங்கள் தொழிலாளி வீட்டின் அடுப்பு அணைந்து கிடக்கிறது என்பதும் உண்மை தான்…!

போராட்டம் விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வர உள்ளது….!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் நாட்கள் நகர்கிறது என்றார் தலைவர் சந்திரன்….!

அவரின் நம்பிக்கை வெற்றியடைய நமது “தமிழ்செய்தி” வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளகிறது

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119