புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா..?

38
540
புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா..?
Advertisement

புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா..?

Advertisement

புதிய 50 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம், பழைய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிகிறது.

மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம்,

தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி,

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது. இதையடுத்து,

புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

ஆனால், 1000 ரூபாய் நோட்டுகள் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

புதிய 50 ரூபாய் நோட்டுகள்குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE