வேம்பு – அரசு….திருமணம்

ஸ்ரீ மந்தவெளி அம்மன்  திருக்கோயில்

0
175
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

இராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தவெளி அம்மன் திருகோவிலில் உள்ள 100 ஆண்டுகளான பழமை வாய்ந்த வேப்பமரத்திற்கும் அரசமரத்திற்கும் நூதன வழிப்பாட்டு முறையில் திருமணம் அப்பகுதி கிராம பக்தர்களால் செய்துவைக்கப்பட்டது.

அம்மூர் பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ மந்தவெளி அம்மன்  திருக்கோயில் 100 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த வேப்பமரத்திற்கு மஞ்சள்,குங்குமம், இட்டு புடவை கட்டி மண பெண்ணாகவும் மற்றும் அதேபோல அருகே உள்ள அரசமரத்திற்கும் மஞ்சள்,குங்குமம், இட்டு மண மகனாகவும் அலங்கரித்து  அப்பகுதி கிரம மக்கள் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாராக இரு பிரிவாக பிரிந்து  அரச மரம் ஆணாகவும் வேப்பமரம் பெண்னாக கருதி பலவிதமான சீர்வரிசைகள் முன்வைப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க வேப்பமரத்திற்கும்,அரச மரத்திற்கும் வெகு விமரிசையாக நூதன வழிப்பட்டு முறையில் திருமணம் நடைபெற்றது .

இந்த நூதன  திருமணத்தின் முக்கிய நோக்கமானது திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் நடக்கவேண்டும் என்றும் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழைந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எனவும் கிராமத்தில் உள்ள பஞ்சம் நிங்கவும் ,மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி வருமை ஒழியவும் கிரம மக்கள் அனைவரும் நலமுடம் வாழ் வேண்டியும் இத்திருமணம் நடத்தப்பட்டதாக அப்பகுதி கிராமமக்கள் தெரிவித்தனர்.

இந்த திருமண விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு மாப்பிள்ளை பொண் என இருதரப்பிற்க்கும் தனித்தனியாக மொய்  வைத்து உணவு அருந்தி சென்றனர்

SHARE
Rj suresh
வேலூர்