இயற்கை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி-ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி

இயற்கை பாதுகாப்பு

Advertisement

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

Advertisement

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி  மற்றும் இயற்கை அறிவியல் மையம், கோயமுத்தூர் ஆகியன இயற்கை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை ஆராய்ச்சி தொடர்பான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு டாக்டர். ஜே. கர்த்திகேயன் கல்லூரியின் சார்பில் தொடர்பு அலுவலராகவும், இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இவ்வொப்பந்தத்தின்படி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் இயற்கை அறிவியல் மையம் ஆகியன இணைந்து இயற்கை பாதுகாப்பு தொடர்பான செயல் திறன் பயிற்சிகள்  மாநாடு,  பல்லுயிர் பாதுகாப்பு, புதுவகை உயிரின கண்டுபிடிப்புகள், தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் மாசு கட்டுப்பாடு தொடர்பான நிகழ்வுகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு ஆய்வுகள், நவீன தொழில்நுட்பத்தினை கொண்டு இயற்கை பாதுகாப்பு, மலைவாழ் மக்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ள ஒப்பு கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் .கு .கருணாகரன் மற்றும் இயற்கை அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கல்லூரியின் துணை முதல்வர்,  முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் இயறகை ஆர்வலர்களான மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119