கமலுடன் நடிகை நக்மா திடீர் சந்திப்பு..!

37
520
கமலுடன் நடிகை நக்மா திடீர் சந்திப்பு..!
Advertisement

கமலுடன் நடிகை நக்மா திடீர் சந்திப்பு..!

Advertisement

பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நக்மாவை காதலன் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் ஷங்கர். கமலுடன் நடிகை நக்மா திடீர் சந்திப்பு..!

அதன் பிறகு பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, தினா, சிட்டிசன் உள்பட பல படங்களில் நடித்தார்.

சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் அரசியலில் குதித்தார். தற்போது அவர் அகில இந்திய காங்கிரஸில் மகளிர் பிரிவு செயலாளராக இருக்கிறார்.

அடிக்கடி தமிழகம் வந்து தமிழ்நாட்டு அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியை அவர் வீட்டில் சந்தித்து பேசினார்.

                                       கமலுடன் நடிகை நக்மா திடீர் சந்திப்பு..!

இந்த நிலையில் நேற்று அவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

“இருவரும் அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்” என்று கமல் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் நக்மா, கமலை சந்தித்தது அரசியலுக்கு அவரை அழைக்கத்தான்.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பதற்கு. சமீபகாலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் கமல்,

காங்கிரசுக்கு வந்தால் அது தமிழ்நாடு காங்கிரசுக்கு பெரிய பலமாக இருக்கும், தி.மு.க, அ.தி.மு.வுக்கு இணையான கட்சியாக காங்கிரஸ் மாறும் என்று,

காங்கிரஸ் மேலிடம் கருதுவதால் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே நக்மா, கமலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

செய்திகள்: கவின்

SHARE