யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்..!

72
224
யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்..!
Advertisement

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்..!

Advertisement

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் நடால் முன்னேறினார். யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் நடால்..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், ஸ்பெயினின் நடால்,

பெடரரை வென்ற அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை நடால் 4–6 என, இழந்தார். இதன் பின் சுதாரித்துக் கொண்ட நடால், அடுத்த இரு செட்களையும் 6–0, 6–3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து அசத்திய இவர், நான்காவது செட்டையும் 6–2 என, தன்வசப்படுத்தினார்.

முடிவில், நடால் 4–6, 6–0, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

யு.எஸ்., ஓபன் தொடரின் பைனலுக்கு நடால், நான்காவது முறையாக (2010, 2011, 2013, 2017) முன்னேறினார்.

இதில் இரு முறை (2010, 2013) கோப்பை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE