நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து…! சங்கரமூர்த்தியின் மருத்துவ சிந்தனைகள் பகுதி:- 28

Advertisement

நெருஞ்சி…!

Advertisement

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ‘அன்யூரியா’  எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் நல்ல மருந்து.

உடைத்து அல்லது இடித்து நசுங்கிய நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி  5 கிராம் இவைகளை  500 மில்லி நீரில்  சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இரண்டு வேளை 60 மில்லி அளவு குடித்து வந்தால்… கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீரெரிச்சல் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மேலும்  கணினியில் வேலை செய்பவர்கள், மற்றும் வெயில் கொடுமையால் ஏற்படும்  உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.

நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்கும்!

நெருஞ்சில் முள்..அல்லது இலையை சுத்தமான பால் அல்லது வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்…  வாழ்வு வளமாகும்…

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119