மே 17, 18ல் இந்து மக்கள் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு..!

225
874
முள்ளிவாய்க்கால்
Advertisement

மே 17, 18ல் இந்து மக்கள் கட்சி சார்பில்  முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு..!

Advertisement

காசிமாநகரில் கங்கைக்கரையில் தர்ப்பணம் மற்றும் தமிழகம் முழுவதும் புத்தமத விழாவில் பங்கேற்க இலங்கை செல்லும் பிரதமர் மோடியுன் பயணத்தை ரத்து செய்ய கோரி – தமிழகம் முழுவதும் இ.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம். முள்ளிவாய்க்கால்

 இலங்லையில் சிங்கள பௌத்த மத வெறியர்களாலும் சிங்கள பேரினவாத இலங்கை அரசங்கத்தாலும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பூர்வ குடிகளான இந்து தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்து தமிழ் இனமக்களை அழித்தொழித்து தமிழ் இந்துக்களின் ஆதி தாயகமான இலங்கையிலிருந்து முற்றிலுமாக தமிழ் மக்களை வெளியேற்றி விரட்டியக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இலங்கை அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இராஜபக்ஷே அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட எரிகுண்டுகளை வீசி இனபடுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஒரே நாளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறுதிச் சடங்களில் கூட முறையாக நடத்திட சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.

தங்கள் தொப்புள்கொடி உறவுகளான இந்து மக்களுக்கு காசியில் கங்கைகரையில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் வரும் மே 18-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு..

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த இ.ம.க பொறுப்பேற்றுள்ளது.

இ.ம.க தலைவர் தமிழ்த்திரு.அர்ஜுன்சம்பத் ஏற்பாட்டில் மே 17-ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ் ஈழம் மலர்ந்திட கூட்டுப் பிரார்த்தனையும்,

மே 18-ஆம் தேதி  இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி காசி கங்கைகரையில் நடைபெற உள்ளது.

அதே சமயத்தில் தமிழகம் முழுக்க அனைத்து நதிக்கரைகளிலும் தர்ப்பண நிகழ்ச்சிகளும், அனைத்து கோயில்களிலும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.

இலங்கை தமிழர் பிரச்சனை என்பது வெறும் பத்து கோடி தமிழர்களின் பிரச்சனை அல்ல. உலகெங்கிலும் உள்ள 120 கோடி இந்துக்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனையாகும்.

ஈழத்தில் சிந்துவது இந்து ரத்தமாகும். இலங்கை தமிழ்மக்கள் பூர்வகுடி இந்துக்கள் ஆவார்கள். இலங்கை என்பது இந்திய நாட்டின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும்.

இந்து தேசியவாதியான நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற காசி தொகுதியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இ.ம.க சார்பில் மோடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மோடி அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கை பௌத்த மத வெறிபிடித்த இலங்கை அரசாங்கம் நடத்துகின்ற புத்தமத வைசாக விழாவில் பங்கேற்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பயணம் மேற்கொள்வதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.  

இந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கோயிலில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றிவிட்டு புத்தர் சிலைகளை வைப்பது,

தமிழர் வசிக்கும் பகுதிகளில் இராணுவமயமாக்கி வைத்திருப்பதும் இன்றும் தொடர்கிறது.

பூர்வ குடி இந்து தமிழர்களைன் நிலங்களை ஆக்கிரமிப்பதோடு, இந்து பெயர்களையும் புத்த பெயர்களாக மாற்றி வருகிறார்கள்.

இந்து சமயத்தின் தொண்மைச்சின்னங்களை அழித்து வருகிறார்கள். இத்தகை ஆதரவற்ற நிலையில் வசிக்கும் இலங்கை இந்து தமிழர்களுக்கு ஆதரவாக பாரத பிரதமர் மோடியும் இந்திய அரசும் செயல்படவேண்டும்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு கோரிக்கை மணுவை சமர்ப்பிக்கின்றோம்.

கோரிக்கைகள்..!

மே 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகம் முன்பாக * இலங்கை இந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கோரியும்,

இடிக்கப்பட்ட இந்துக் கோவில்களை கட்டித்தரக் கோரியும், பாரத பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை ரத்து செய்யக்கோரியும்,

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றிடக் கோரியும்,

இலங்கைத் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யக் கோரியும்,

போர்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

முஸ்லீம்களுக்கு வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்தது போல தமிழ் ஈழ மக்களுக்கு தனி இந்து தமிழ் ஈழம் மலர்ந்திட வழிவகை செய்திடும் படியும்,

குறைந்த பட்சம் இராஜு ஜெயவர்ந்த்தனா ஒப்பந்தத்தையாவது முழுமையாக அமல் படுத்த வேண்டியும்,

தொடர்ந்து இந்து தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியும் – கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படுகிறது. என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்

தெரிவித்துள்ளார்..

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

SHARE