மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று..!

36
341
மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று..!
Advertisement

மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று..!

பிரபல, ‘பாப்’ பாடகர், மைக்கல் ஜோசப் ஜாக்சன், அமெரிக்காவில், ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் தம்பதிக்கு மகனாக, 1958 ஆகஸ்ட், 29ல் பிறந்தார். மைக்கல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று..!

தன் ஆறு வயதில், பாட்டு போட்டியில் பங்கேற்று, முதல் பரிசு வாங்கினார்.

உலகின் புகழ் பெற்ற, அப்பல்லோ இசை அரங்கில், ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டு தொகுப்பு வெளியானது.

அதன் மூலம், அவர் பிரபலம் அடைந்தார். ‘திரில்லர்’ என்ற பாடல் தொகுப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இசையில் அவர் படைத்த சாதனைகளுக்காக, 13 கிராமி விருதுகள் பெற்றவர். இரண்டு முறை, கின்னசில் இடம் பெற்றார்.

‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொலி, ஒரே நேரத்தில், 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.

50 கோடி பார்வையாளர்கள் அந்நிகழ்ச்சியை பார்த்தனர்; இதுவே, உலக அளவில் அதிக பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சி.

கடந்த, 1979ல் நடன பயிற்சியின்போது, ஜாக்சனுக்கு மூக்கு உடைந்தது.

ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். 2009, ஜூன் 25ல் இறந்தார். அவர் பிறந்த தினம், இன்று.

தகவல்கள் : கவின்

Advertisement
SHARE