மெர்சல் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு…!

347
980
மெர்சல் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு…!
Advertisement

மெர்சல் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு…!

Advertisement

தெறியை தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு,

சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும்  மெர்சல் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது.

இத்துடன் மெர்சல் ஷூட்டிங் முழுவதுமுாக முடிவடைகிறது. இன்னொரு பக்கம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார்.

ரூ.135 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் அஜித்தின் விவேகம் டீசர் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்த நிலையில் அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பில்,

மெர்சல் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற செப்., 21-ம் தேதி, இயக்குநர் அட்லீயின் பிறந்தநாளன்று மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி இருப்பதுடன் டீசர் வெளியீட்டு தேதியை டிரென்ட்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

SHARE