அனைத்து சாதனைகளையும் முறியடித்த மெர்சல் பட டீசர்..!

100
638
அனைத்து சாதனைகளையும் முறியடித்த மெர்சல் பட டீசர்..!
Advertisement

அனைத்து சாதனைகளையும் முறியடித்த மெர்சல் பட டீசர்..!

Advertisement

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அனைத்து சாதனைகளையும் முறியடித்த மெர்சல் பட டீசர்..!

ட்விட்டரில் #MersalTeaser -ஐ இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் செய்தனர். டீசர் வெளியாகி சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கத் துவங்கினர்.

விஜய் மூன்று கெட்டப்களில் வரும் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கின்றன. ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்று சாதனை படைத்துவருகிறது ‘மெர்சல்’ டீசர்.

வெளியானது முதலே யூ-ட்யூப் டீசர்களில் ஒவ்வொரு ரெக்கார்டாக முறியடித்துக் கொண்டே இருந்தது மெர்சல் டீசர்.

டீசர் வெளியாகி 90-வது நொடியிலேயே 25,000 லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனைக்கான முதல் அடியை எடுத்து வைத்தது மெர்சல் டீசர்.

வெளியான 10 நிமிடத்தில் 100K லைக்ஸ் கடந்து சாதனை படைத்தது. விஜய் ரசிகர்கள் குவித்த லைக்ஸ்களால் 100 நிமிடத்தில் 500K லைக்குகளை எட்டிப்பிடித்தது டீசர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலக அளவில் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்த விவேகம் டீசரின் 598K லைக்ஸ் உலக சாதனையை 4 மணி நேரத்தில் 599K லைக்ஸ் பெற்று முறியடித்து உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீசராக சாதனை படைத்தது ‘மெர்சல்’.

7 மணி நேரத்தில் 65 லட்சம் வ்யூவ்ஸ் பெற்று மற்றுமொரு சாதனையையும் படைத்தது. இதற்கு முன் விவேகம் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பெற்றதே சாதனையாக இருந்தது.

12 மணி நேரத்திற்குள் 80 லட்சத்தைக் கடந்துவிட்டது மெர்சல் டீசர்.மெர்சல் டீசர் உலக அளவில் குறைந்த நேரத்தில் அதிக லைக்குளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

இந்தச் சாதனை ஹாலிவுட் படங்களே இதுவரை பெற்றிராத சாதனையாக அமைந்துள்ளது.

செய்திகள்: ரோகிணி

SHARE