மர செக்கு எண்ணெய்யே…. உன் நிலை என்ன? உன் விலை என்ன?

'மர செக்கு' அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு.

Advertisement

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்.

Advertisement

நல்ல எண்ணெய்…! எந்த எண்ணெய்…! என்ற குழப்பமா? வேண்டவே… வேண்டாம்…! உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆர்கானிக் கடையில் உங்களுக்கு நம்பிக்கை உள்ள நபராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, தாராளமாக எண்ணெய் வாங்கலாம்.

இல்லை என்றால் நீங்களே எண்ணெய் தயார் செய்து கொள்ளலாம்..! அதில் ஒரு சிக்கல் இருக்கிறது? குறைந்த பட்சம் 15 கிலோ எள் அல்லது நிலக்கடலை இருந்தால் தான் செக்கில் எண்ணெய் ஆட்ட முடியும்…! இரண்டு… மூன்று பேர்களை சேர்த்துக்கொண்ட நீங்களே எண்ணெய் தயாரிக்கலாம்.

அப்போது தான் எண்ணெய்யின் உண்மையான விலை விபரம் உங்களுக்கும் தெரியும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய்க்கு இரண்டரை கிலோ நல்ல எள் வேண்டும் அதுமாதிரியே கடலெண்ணைக்கு இரண்டரை கிலோ பருப்பு வேண்டும்.

மளிக்கைக்கடை  அல்லது எள் பயிர் செய்கிற விவசாயிகளிடமோ குறைந்தபட்சம் 15 கிலோ எள் வாங்கி, அதை தூசி இருந்தால் சுத்தப்படுத்தி, 2 நாள் வெயிலில் காய வைத்து விடுங்கள்.

இந்த அளவு எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி என எடுத்துக்கொண்டு, அதனை எண்ணை அரைக்கிற செக்கு ஆலையில் இந்த எள், கருப்பட்டியை கொடுத்து அரைத்து அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வாங்கிக்கொள்ளுங்கள்.

இதற்கு அவர்கள் குறைந்த பட்ச காலியாக 10 அல்லது12 ரூபாய் கேட்பார்கள்.

அரைத்து கிடைத்த எண்ணையை வீட்டிற்கு கொண்டு வந்து, ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றி ஒரு சிறிய துண்டு கருப்பட்டியை அதனுடன் போட்டு சில்வர் பாத்திரத்தின் வாய் பகுதியை வெள்ளைத்துணியால் வேடு கட்டிக்கொள்ளுங்கள்.

அதை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து விடுங்கள்.

மூன்றாம் நாள் நமக்குத்தேவையான சுத்தமான எண்ணை நன்றாக தெளிந்து இருக்கும். இப்போது அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு எள் வாங்கிக்கொண்டீர்களோ அதில் நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து சதவீதம் எண்ணை கிடைக்கும். அதாவது,  கிலோ எள்ளுக்கு 6 முதல் 7 கிலோ எண்ணை கிடைக்கும்

‘மர செக்கு’ அதில் அரைத்து எடுப்பது என்பது மிக மிக சிறப்பு.

ஏன் என்றால், இரும்பு இயந்திரத்தில் அரைத்து எடுக்கும் போது அதிக உஷ்ணத்தில் அரைக்கப்படும். கல் செக்கில் என்றால் அதை விட குறைவான உஷ்ணத்திலும் அதுவே மர செக்கில் எனும் போது மிக மிக குறைவான உஷ்ணத்திலும் அரைக்கப்படுகிறது. உஷ்ணம் அதிகமாக அதிகமாக எண்ணையில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து போகும்.

கடைகளில் கிடைக்கும் எண்ணை, அதை தயாரிப்பவர்கள் பெரிய இயந்திரத்தில் வைத்து மிக மிக அதிக உஷ்ணத்தில் எண்ணெய் பிழிந்து பின்னர் அந்த எண்ணெய் குளிரவைத்து தான் எண்ணெய் தயாரிக்கிறார்கள்.

எனவே, அதில் உயிர் சத்துக்கள் என்பது சுத்தமாக இருக்காது. மேலும் ரீபைண்டு என்ற பெயரில் அதில் உள்ள பிற சத்துக்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள்.

நாம் அதை உபயோகபடுத்தினால் நமக்கு என்ன பயன் உள்ளது?

மர செக்கு, கல் செக்கு, இயந்திர செக்குஇதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.
எள் கடலை வாங்கும்போது எண்ணை தயாரிக்க என்று கேட்டு வாங்குங்கள். ஏனென்றால் சில எள் கடலைகளில் பொக்கு இருக்கக்கூடும். அப்படிப்பட்டவைகளை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வாங்கிய எள் கடலையை கண்டிப்பாக வெயிலில் 2 நாட்கள் காயப்போட வேண்டும். எண்ணை எடுத்த பின்னரும் எண்ணையை 2 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.

எள் புண்ணாக்குக்கு சரியான விலையில்லை ஆனால் கடலை புண்ணாக்குக்கு 40 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை வேலையுண்டு.இன்றைய மார்க்கெட்டில் எள் மற்றும் உடைத்த கடலைபருப்பு களின் விலை 95 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையுள்ளது.
இதை வைத்து சுத்தமான எண்ணெய் என்ன விலை? என்று நீங்களே கணக்கு போட்டு பாருங்கள்.

அதேபோல எண்ணெய்யின் தரம் நிலை என்ன? என்பதை நீங்கள் கண்டுபிடித்தால் தான் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்….! இல்லை என்றால் ஆஸ்பத்திரி டாக்டர்களின் பையில் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

P.T., ரக பருத்தி கொட்டை, ரப்பர் கொட்டை மற்றும் கண்ட…கண்ட விதைகளில் தயாரித்து சந்தையில் இருக்கும் எண்ணெய் சிறந்ததா..?

இல்லை நீங்கள் தேர்வு செய்யும் எந்த எண்ணெய் சிறந்தது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119