மானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்

ராஜகம்பீரத்தில் புறவழிச்சாலை

Advertisement

புறவழிச்சாலை

Advertisement

மானாமதுரை அருகே புறவழிச்சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு போலீசார் உரிய முறையில் ஒத்துழைப்புஅளிக்கவில்லை, இதனால் நலப்பணியில் தாமதம்…..! மற்றும் மக்கள் வரிப்பணம் விரயம்..!
என்று மானாமதுரை பொதுமக்கள் தங்களின் மனக்குமுறலை, நமது “தமிழ்செய்தி” செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை பணி ரூ.937 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது ரெயில்வே மேம்பாலங்கள், ராஜகம்பீரம் புறவழிச்சாலை பணிகள் மட்டும் தாமதமாகி வருகிறது.

போலீசார் பாதுகாப்பு

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் புறவழிச்சாலை அமைக்க மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் கடந்த வாரம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மனு கொடுத்தார்களாம்.

ஆனால் போலீசார் கோர்ட்டு அனுமதி வாங்கி வர சொல்லி அதிகாரிகளை திருப்பி அனுப்பி விட்டனராம்.

நான்குவழிச்சாலை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டதாம். புறவழிச்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த பழைய ரோட்டில் மணல் கொட்டும் பணியும் தொடங்கி விட்டது. 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள புறவழிச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக ரோடு அமைகிறது.

இதற்காக விவசாய நிலங்கள் அளக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசார் பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், அங்கு பணிகள் தொடங்கப்படாத  தாமத நிலை ஏற்பட்டு உள்ளதது.

ராஜகம்பீரம் ஊருக்குள் நான்கு வழிச்சாலை அமைத்தால் கோவில், பள்ளிவாசல், தேவாலயம் மற்றும் வீடுகள் என 192 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்.

ஆனால் பழைய ரோட்டையொட்டி 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்தால் 51 கட்டிடங்கள் மட்டுமே இடிபடும். இதற்காக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து விட்டதாம். அவற்றை அளவீடு செய்து கையகப்படுத்துவதற்கு நில அளவைதுறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

அளவீடு செய்யும் பணிக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தும் போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் தாமதமாகிறது..!

இதில் மக்கள் வரி பணம் தான் விரயமாகிறது…!என்றனர்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119