மறக்கப்பட மலையக தமிழர்களின் அவலம்..!?! கதறவைக்கும் பதிவு

238
847
மலையக தமிழர்களின் அவலம்
Advertisement

மறக்கப்பட மலையக தமிழர்களின் அவலம்..!?! கதறவைக்கும் பதிவு

Advertisement

இலங்கை பிரச்சினை என்றால் ஈழதமிழர் என்பார்கள், சிங்களகொடுமை, புலிகள், போர் , மறக்காமல் காங்கிரஸ் கலைஞர் துரோகம்  இப்படித்தான் செய்திகள் வரும்

இலங்கையில் மூவிதமான தமிழர்கள் உண்டு, ஈழதமிழர், இஸ்லாமிய தமிழர், மலையக தமிழர்

இதில் ஈழதமிழரை பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், இஸ்லாமிய தமிழரும், மலையக தமிழரும் மறக்கபட்டவர்கள்

இஸ்லாமிய தமிழர்களின் பிரச்சினை வேறுமாதிரியானது, முதலில் சிங்களனும் யாழ்பாண தமிழனும் அவர்களை போட்டுத்தான் அடித்துக்கொண்டிருந்தான்,

பின் சிங்கள யாழ்பாண மோதல் வந்தபின் புலிகள் மட்டும் அடித்துகொண்டிருந்தனர் அல்லது பிடுங்கிகொண்டிருந்தனர். ஓரளவு வசதியான இனம் அது, அதுதான் காரணம்.

இந்த  மலையக தமிழர்கள்தான் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவு, ஈழ தமிழர் அந்த  மண்ணை சார்ந்தவர்கள், வெள்ளையர் ஆட்சியில் தேயிலைக்காக மலையகம் கொண்டு செல்லபட்டவர் வம்சம் மலையக தமிழர்கள்

அடிமைபட்டு கிடக்கும் அவலம்

இவர்களை மேலாதிக்கம் செய்த வெள்ளையனின் அதிகாரிகள் யாழ்பாண தமிழர்கள், இந்த யாழ்பாண தமிழருக்கும் இந்த தமிழர்களை அடிமையாகவே வைத்திருப்பதில் ஒரு ஆனந்தம்,

தமிழன் இன்னொரு தமிழனை அடக்கி வைத்திருப்பதில் வெள்ளையனுக்கும் மகிழ்ச்சி

                                                   

அவர்கள் பெரும்பாலும் தமிழக அடித்தட்டு மக்கள், இலங்கையில்நிலவிய சாதிபாகுபாடு அவர்களை அங்கும் அடித்தது

ஈழதமிழருக்கு அவர்கள் ஒதுக்கபட்டவர்கள், புலிகளின் ஈழ வரைபடத்தில் கூட மலையகம் வராது,

ஈழபோராட்டம் மலையக தமிழர்களை அருகிலே சேர்க்கவில்லை என்பது வேறுவிஷயம், பத்மநாபா கம்யூனிஸ்ட் என்பதால் அவர் கொஞ்சம் முயற்சி எடுத்தார் அவரோடு சரி

புலிகள் ஒருகாலும் மலையக தமிழர் உரிமை வாழ்வு பற்றி கனவிலும் சிந்தித்ததில்லை,

மலையகத்தார் மனிதர்களே இல்லை என்பது போல இருந்தார்கள் அவர்கள் கனவு யாழ்பாணம், கிளிநொச்சி இன்னபிற‌

ஈழவிடுதலை வெறி அவர்களிடம் இருந்ததே தவிர மலையக மக்கள் எப்படியும் போகட்டும் என்ற எண்ணம்தான் இருந்தது,  

மலையகத்தார் தமிழர்கள்தான் ஆனால் ஈழத்தவர் அல்ல என்பதால் புலிகள் அதுபற்றி சிந்திக்கவில்லை, புலிகள் அப்படித்தான்

சிங்களமோ ஈழதமிரையே விரட்ட துணிந்த நிலையில் மலையக தமிழர்களை எங்கே நினைக்கும்?

1960களில் மலையக மக்களில் ஒரு பகுதியினரை நாடற்றவர்களாக்கி, இந்தியாவிற்கு அனுப்பி மகிழ்ந்தது சிங்களம், யாழ்பாணத்தாரும் தடுக்கவில்லை மாறாக சென்று தொலையட்டும் எனும் மனநிலையில் இருந்தார்கள்

அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசும் அவர்களை ஏற்றிருக்க கூடாது, மல்லுகட்டியிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை, மாறாக ஏற்றுகொண்டது, இது பெரும் தவறு

மலையக மக்கள் பெருகினால் அது நம் வோட்டு வங்கிக்கு பாதிப்பு என சிங்களமும், யாழ்பாண தமிழனுக்கு ஆபத்து என ஈழமும் நினைத்து செய்த கூட்டு சதி அது.

குடியுரிமை பறிக்கபட்டு அனுப்புவது என்பது ஒரு அவமான செயல், கிட்டதட்ட நிர்வாண கோலம்

அந்த கொடுமையினை அன்று சிங்களம் செய்தபொழுது எல்லா தரப்பும் வேடிக்கை பார்த்தது, பெரும் வரலாற்றுகொடுமை அது.

பின்பு ஈழபிரச்சினையில் இந்திராவும், ராஜிவும் தலையிட்டபொழுதும் அம்மக்களை மறந்துவிட்டார்கள் அல்லது புறக்கணித்தார்கள்

இந்த மலையக அடிமை தமிழர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் சிங்களம், ஈழம், தமிழகம், இந்தியா என எல்லா தரப்பு மக்களாலும் கண்டுகொள்ளபடாத அபலைகள்

சொந்த நாட்டு உறவும் இன்றி, வாழும் நாட்டில் உரிமை இன்றி ஒரு வகையான சிறை அகதி வாழும் வாய் பேசும் அடிமைகள், மிக மிக பரிதாபத்திற்குரியவர்கள்,

அவர்கள் நிலையினை நினைத்தாலே அழுகை வரும், கிட்டதட்ட 300 ஆண்டு கால அழுகை அது…

மோடியினால் விடிவுகாலம்…

முதன் முறையாக மோடி அரசு அவர்களை கவனிக்கின்றது, சில நலதிட்டங்களை அறிவித்திருகின்றது, காங்கிரஸ் செய்ய தவறியதை மோடி செய்கின்றார்

மலையகம் எனும் தமிழரின் துயர் நிறைந்த பிரதேசத்திற்கு முதன் முதலில் செல்லும் உச்ச இந்திய தலமை அவர்தான், மருத்துவமனை போன்ற சில காரியங்களை தொடங்க வைக்க செல்கின்றார்

ஈழமக்களுக்கு உதவி இந்தியா இழந்துதான் அதிகம் என உணர்ந்த இந்தியா இப்பொழுது தன் கடமையினை உணர்ந்திருக்கின்றது,

மலையக தமிழர் இந்திய தமிழரின் வம்சம், இந்திய உறவு அவர்களுக்கு உதவுவது தன் கடமை என்ற எண்ணம் பாஜக அரசுக்குத்தான் ஏற்பட்டிருக்கின்றது.

                                              

சர்ச்சைகள் இருப்பினும் மோடியினை இந்த விஷயத்தில்  காலில் விழுந்து வாழ்த்தலாம், அதில் பெருமை அடையலாம்

300 ஆண்டு கால மலையக வாழ்வில் அம்மக்கள் முதன் முதலாய் இந்திய பிரதமர் தங்களுக்காய் வரபோவதை எதிர்பார்த்திருக்கின்றனர்,

தங்கள் குரலையும் கேட்க ஒரு அயல்நாட்டு தலைவன் வருகின்றான் என உணர்ச்சி பிராவகத்தில் இருக்கின்றனர்

பிரதமர் மோடியினை ஒரு தமிழனாய் வாழ்த்துகின்றோம், தமிழரின் உள்ளங்களை மோடி குளிர்விக்கும் நேரமிது, இன்னும் பல உதவிகளை அம்மலையக தமிழர்கள் பெறட்டும், வாழட்டும்

மோடி செய்யப்போவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு, பெரும் காரியம் ஆனால் தமிழக ஏடுகள் ஏதும் உருப்படியாக எழுதி கண்டீர்களா? பெட்டி செய்தியில் கூட போடமாட்டார்கள்

இதுவே புலிகள், ஈழம், யுத்தம் என செய்தி இருக்கட்டும் வரிந்து கட்டி வெளியிடுவார்கள் ஏன் அப்படி?

ஈழதமிழனிடம் பணம் கொட்டி கிடக்கின்றது, சினிமாக்காரர்களுக்கு ஐரோப்பாவில் ஈழதமிழர் மார்க்கெட் இருக்கின்றது

பாவம் மலையக தமிழன் ஏழை, அவனிடம் என்ன இருக்கின்றது? அதனால் கண்டுகொள்ள மாட்டார்கள், தமிழக ஊடகங்களை போல மோசமான விஷயம் உலகில் ஒன்றுமே இல்லை

இப்பொழுதும் எவனாவது அரைகுறை உணர்வாளன் “ஏய் மோடி, மலையகத்திற்கு ஏன் சென்றாய்?

புலிகளின் துப்பாக்கி முழங்கிய வடக்கு பக்கம் ஏன் செல்லவில்லை, நீ தமிழ் துரோகி..” என சொல்வான் என்றால் அவனை விட ஒரு தமிழின துரோகி அண்ட சராசரத்தில் இருக்கவே முடியாது, அவனே துரோகி

பாலாவின் பரதேசி படம் பார்த்து அழுதோம் அல்லவா? அது நம் கண்முன் இன்னமும் நடந்தால் எப்படி இருக்கும்? அதுவும் சொந்த தமிழருக்கு நடந்தால் எப்படி இருக்கும்?

நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் எப்போதும் மலையக தமிழர் வாழ்வு, இப்பொழுது கூட‌

ஒடுக்கபட்ட தமிழர்களை தேடி செல்லும் அந்த மோடியினை மனதார வாழ்த்துகின்றோம்.. அவர் செய்திருப்பது மிக பெரும் நல்ல விஷயம், அவசியம் செய்தாக வேண்டிய விஷயம்..

Royal Salute to  Honorable  Modi…. Jai Hind

(இவை எல்லாம் தமிழக‌ பாஜக மக்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள், அவர்களோ எல்கேஜி பிள்ளைகளை போல எங்களை ஜூன் 3 எக்ஸ்பிஷனில் சேர்த்துகொள்ளுங்கள் என அழுதுகொண்டிருக்கின்றார்கள்

செய்திகள்: தலைமை செய்தியாளர் 7373141119

SHARE