சீமானுக்கு…. கடிதம்

33
503
சீமானுக்கு.... கடிதம்
Advertisement

சீமானுக்கு…. கடிதம்

Advertisement

திரு. சீமான் எனும் செபாஸ்டின் சைமன் அவர்களே! 23.5.17 நடந்த தந்தி டி.வியில் உங்கள் விவாதம் பார்த்த பிறகு இதை எழுதுகிறேன். முனைவர்.மு.சந்தோஷ்

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் தமிழர்களை ஆளக்கூடாது என்றும் சொன்னீர்கள். இப்படிப்பட்ட உங்கள் பேச்சு உங்களுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லையென்பதை தீர்க்கமாக காட்டுகிறது.

சக மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசுவதுதான் தமிழர் பண்பாடு. கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க , அவை அடக்கமோ அவை மாண்போ சிறிதும் இன்றி

நீ, வா, போ, ஏய் என்று ஒருமையில் பேசியதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. முதலில் தமிழ் மரபை கற்றுக் கொள்ளுங்கள் சைமன்.

இந்திய அரசியல் சட்டத்தை நீங்கள் நாராசமாக விமர்சனம் செய்ததைப் பாரத்து நெஞ்சு பதைபதைக்கிறது.

நீங்கள் இந்திய இறையான்மையையும் கீதையைவிட புனிதமான அரசியல் சட்டத்தையும் கேலி பேசிவது ஒரு நல்ல அரசியல் தலைவன் இல்லை என்பதை உணர்த்துகிறது .

நீங்கள் உங்களை தமிழக மக்களின் தகப்பன் போல சித்தரித்து , என் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன் என வீர ஆவேசமாக சொன்னீர்கள்.

யார் தமிழர்கள் என்று முடிவு செய்யும் அதிகாரம் உங்களுக்கு எப்படி வந்தது. நீங்கள் 8 கோடி தமிழர்களால் பிரதிநிதியாக எப்போது அறிவிக்கப் பட்டீர்கள்.

தமிழ் மொழி உணர்வைத் தூண்டி விட்டு மக்களிடம் விஷத்தையும் வெறுப்பையும் வளர்க்கும் உங்கள் பேச்சு அருவருப்பாக உள்ளது.

மொழியை தாண்டி நாம் இந்திய தேசத்தின் மக்கள் என்ற தேசியத்தை நீங்கள் மதிப்பதேயில்லை.

அவையில் கத்தி சத்தம் போட்டு பேசிவதால் உங்கள் மீது நம்பிக்கை வரும் என்று தவறாக கற்பனை செய்ய வேண்டாம். மாறாக நீங்கள் எதிராளியின் கருத்துக்கு மதிப்பு தருவதோ அவர்களை பேச அனுமதிப்பதோ இல்லை.

பிரிவினை மொழிதுவேஷ இனதுவேஷ அரசியல் செய்யும் உங்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

உங்களுடன் விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருமே உங்களை மரியாதையோடு திரு. சீமான் என்று அழைத்ததை பார்த்தீர்களா? அதுதான் உண்மையான தமிழர் பண்பாடு. ஆனால் நீங்கள் அங்கிருந்த ஒருவருக்கு கூட மரியாதை கொடுத்து பேசவில்லை.

தயவுசெய்து தமிழன் சான்றிதழ் கொடுப்பதாக நினைத்து தமிழர்களுக்கு அவமானத்தை ஈட்டிக் கொடுக்காதீர்.

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னீர்கள். அப்போ நீங்கள் சினிமாவில் நடித்து இயக்குனராக இருந்துவிட்டு பிறகு எப்படி அரசியல் பிரவேசம் செய்தீர்கள் செபாஸ்டின் சைமன்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

SHARE