வியாபாரிகளை பிழைக்க விடுங்கள்…ஒரு அப்பாவி வர்த்தகரின் கடிதம்

ஒரு அப்பாவி சிறு வியாபாரி

Advertisement
Advertisement

வர்த்தகர் ஒருவரின் வயிறு எரிந்த, வாட்ஸ்அப் வழி வந்த கடிதம் இது….!

அவரின் இந்தக்கடிதத்தில்… ஒவ்வொரு தமிழர்களின் அடிமனதில் குமுறிக்கொண்டு இருக்கும் வார்த்தைகளின் பிரதிபலிப்பதாகவே உள்ளது…

கடிதத்தை படியுங்கள்…..! கருத்துக்களை பதிவு செய்யுங்கள்….!

விக்ரமராஜா,வெள்ளையன்,ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு சிறுவியாபாரியின் கடிதம்

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்கிறேன்.

வியாபாரிகளின் நிலைப்பாடு காவிரி மேலாண்மை வாரியம் அமையவேண்டும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

விவாசாயிகள் நல்லா இருந்தால்தான் நாங்கள் வியாபாரம் நல்ல முறையில் செய்ய முடியும்.

விளைச்சல் அதிகமானால் பணபுழக்கம் அதிகமாகும், எனவே விசாயிகள் பிரச்சனைக்கு வியாபார பெருமக்களின் முழு ஆதரவு உண்டு.
ஆனால் இங்கு நடப்பது என்ன?

அரசியல்
அரசியல்
அரசியல்

விக்ரமராஜா அவர்களுக்கும்,
வெள்ளையன் அவர்களுக்கும் தற்போதைய வியாபாரிகளின் நிலை நன்றாக தெரியும்.

பணமதிப்பிழப்பு

ஜிஎஸ்டி போன்ற காரணமாக வியாபாரம் குறைந்துள்ளது.
ஒவ்வொரு வியாபாரியும் கடைவாடகை கட்டவும்,பணியாளர் சம்பளத்திற்கும்,இதரகடைசெலவுகளுக்கும்,சிரமபட்டுக்கொண்டிருக்கிறான்.
இந்த நிலையில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கிறீர்கள்..
அதுவும் வெவ்வேறு தேதிகளில்.காரணம் என்னுடையது பெரிய சங்கமா?
உன்னுடைய சங்கம் பெரியதா என்ற ஈகோவால் இந்த தனி தனி அறிவிப்பு.
நல்ல இருக்கு நீங்க வியாபாரிகளை காக்கும் லட்சணம்.

அப்புறம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள்
சரி நீங்க ஒரு தேதில கடையடைப்பு செய்ய சொல்றீங்க.

அப்போதான் நீங்க அரசியல் செய்ய முடியும் அதற்கு பலிகடா வியாபாரிகள்.
சரிய்யா கடைய அடச்சுட்டு வீட்ல படுத்துக்குறோம்.

அன்றய வருமானம் போச்சு…
வயத்துல ஈரதுணிய போட்டுக்குறோம்.
நீங்க ஒண்ணு செய்யணும்…..

உங்க கட்சி சார்பா ஒரு டிவி வச்சு நடத்துறீங்களே அதுல கடையப்பு நடக்குற அன்னைக்கு விளம்பரமே இல்லாமல் ஒளிபரப்பு செய்வீங்களா??
செய்ய மாட்டீங்க காரணம் வருமானம் போய்டும்.

நாங்கதானே இளிச்சவாயர்கள்.
உங்களுக்கு வந்தா ரத்தம்
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி.

யப்பா புண்ணியவான்களே வியாபாரிகளை பிழைக்க விடுங்க.

இப்படிக்கு,
ஒரு அப்பாவி
சிறு வியாபாரி.

செய்தி தொகுப்பு – குரங்கி

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119