தலைவன் உருவாகிறான் …தந்தி டிவி கணிப்பு

தினகரனுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது

0
258
thanthi tv
Advertisement
Advertisement

ஆர்கே நகர் இடைத்தேர்தல் பற்றிய .தந்தி டிவி கருத்து கணிப்பு வெளிவந்துள்ளது . அதை பற்றிய சின்ன அலசல் .

பணம் இருந்தால் வெற்றியா

அப்படியென்றால் இந்தியாவில் முதல் பத்து பணக்காரர்களில் இடம்பிடித்துள்ள கலாநிதிமாறன் மட்டுமே தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியும் .

ஆக,வெற்றிக்கு பணம் மட்டுமே அடிப்படையாக அமையாது .மக்களின் மனம் கவர்ந்த ஆளுமை அவசியம் .கட்சி ,அடிப்படை கட்டுமானம் மிக அவசியம் .

ஆர்கே நகர்

கடந்த முறையைவிட இந்த முறை தினகரனுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்று தந்தி டிவி சொல்கிறது .

கடந்தமுறை அதிமுக அம்மா என்ற கட்சி சார்பாக நின்றார் தினகரன் .முதல்வர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் அவருக்காக ஓட்டு கேட்டது .

அப்போது கிடைத்த ஆதரவைவிட இப்போது அதிகரித்து இருப்பதின் அரசியல் என்ன.

அப்படியென்றால் அவருக்கு கிடைக்கும் ஆதரவு என்பது தனிப்பட்ட ஆளுமைக்கு கிடைப்பதா …

சின்னமும் வேட்பாளரும்

mathu
marutha kanesh

இரட்டை இலையில் போட்டியிடும் மதுசூதனன் ,உதயசூரியனில் போட்டியிடும் மருது கணேஷ் என்ற இருவரும் உள்ளூர் மனிதர்கள் .

இந்த இருவரும் இதே சின்னத்தில் வேறு தொகுதியில் போட்டியிட்டால் சொந்த கட்சிக்காரர்கள் கூட ஏற்று கொள்ளமாட்டார்கள் .

ஒரு தலைவன் மட்டுமே தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் போட்டிபோட்டு வெற்றி பெறவோ…கடும் போட்டியை உருவாக்கவோ முடியும் .

தலைவன்

வெற்றிடத்தை நிரப்ப தினகரன் வந்து விட்டதையே இந்த கருத்து கணிப்பு உணர்த்துகிறது .

சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிவோ …வெற்றியின் விளிம்பிலோ வரும் தினகரனுக்கு இரட்டை இலையும் ,கட்சியும் வந்து சேர்ந்தால் அதிமுக வின் அம்மா சொன்னது போல நூற்றாண்டு கடந்தும் கட்சி வாழும்,ஆளும் என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும் .