லேசர் மார்க்கர்-உதயன் பூங்குன்றன்

உதய் டெக்

Advertisement
Advertisement

சந்தையில் அறிமுகமான அத்தனை பொருட்களை வீழ்த்தி, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும்…!

கள்ளச்சந்தை குள்ளநரி வியாபாரிகள், உடனடியாக போலி பொருட்களை தயாரித்து வர்த்தகத்தில்  ஊடுருவ விடுவது வாடிக்கை…!
காலகாலமாக இப்படி கொள்ளையடித்து வரும்

இந்த திருட்டு கும்பலை முறியடிக்க….! தரமானவற்றை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படும் துயரத்தை அளவிடமுடியாது…..!

இவர்களின் துயர்துடைக்க அதாவது பூணைக்கு மணி கட்டுவதை போல்….! போலிகளுக்கு வேலி அமைத்து விட்டார் உதையன் பூங்குன்றன்….!

உண்மையான அசல் பொருட்களையே  அசத்தி விடும் போலி தயாரிப்புகளை தடுத்து , அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது இவரின் “உதய் டெக் எஞ்சினியரிங்” தயாரிப்பில் வந்துவிட்டது நவீன தொழில் நுட்ப “லேசர் மார்க்கர்” மெஷின்…!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ளது வழக்கறிஞர் உதயன் பூங்குன்றனின் நிறுவனம்…!

ஆம் உண்மை தான் ” உதய்  டெக்எஞ்சினியரிங்” நிறுவனர் உதயன் பூங்குன்றன் அடிப்படையிலே சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றியவர்…!

இது பற்றிய விபரத்தை அவர் நம்மிடையே பகிர்ந்ததாவது:-

 நான் பிறந்தது வளர்ந்த சமையநல்லூர் ஒரு ஆன்மீக பூமி…!
அதனால் தான் என்னவோ, வாதங்களின் வாய்மை அடிப்படையில் உண்மையை வென்று கொக்கரிக்கும்  பொய் மன்றத்தில் என் மனசாட்சியை அடகுவைத்து வாதாட தைரியமில்லாத போய்விட்டது.

திருந்தாத மனங்களிடம் காசுவாங்க என் கை கூசியது..! அதன் காரணமாக என் வாழ்க்கை வழியை மாற்றிக்கொள்ள இறைவன் இஞ்சினியரிங் வழியை காட்டினார், அதன் வழியில் எனது பயணம் செல்கிறது.

எனது சகோதரர் நடத்தி நிறுவனத்தில் சில பொறுப்புகளை ஏற்று செய்தேன்.
ஏற்றுக்கொண்ட பணி சிறக்க அதில் என்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டேன்.

புதிய… புதிய…தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஜப்பான், கொரியா, தைவான், சிங்கப்பூர்,மலேசியா, போன்ற சில நாடுகள் சென்று வந்தேன்.
முதலில் இயந்திரங்களில் உதிரிபாகங்களை வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து தருவித்து தந்து கொண்டிருந்தேன்.

எனது வாடிக்கையாளர்கள் இந்தத்துறையில் எனக்கு நிறைய கற்றுக்கொள்ள உதவிகரமாக இருப்பதனால், எனது முயற்சி அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது.

செய்யும் தொழில்  தெய்வம்… என்றிருந்தால் தெய்வம் என்றும் துணை இருக்கும்…!என்றார் பொறியியல் இஞ்சினியரான வழக்கறிஞர், உதயன் பூங்குன்றன்….

நீதிமன்றத்தில்தான் போலிகளை தடுக்க தக்கவழி இல்லை என்ற உதயன் பூங்குன்றன்…!

மக்கள் மன்றத்தில் போலிகளுக்கு வேலி அமைக்கும் “லேசர் மார்க்கர்” கை சந்தை படுத்துவதில் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்…. உதயன் பூங்குன்றன்….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119