தேவரை தவறாக பேசியதால் கொளத்தூர் மணிக்கு மதுரை செல்ல தடை..!

29
454
தேவரை தவறாக பேசியதால் கொளத்தூர் மணிக்கு மதுரை செல்ல தடை..!
Advertisement

தேவரை தவறாக பேசியதால் கொளத்தூர் மணிக்கு மதுரை செல்ல தடை..!

Advertisement

போராட்டத்தில் பங்கேற்க மதுரைக்குப் புறப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி,

திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கொளத்தூர் மணி மதுரைக்குப் புறப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் காலை 11 மணிக்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கொளத்தூர் மணி முத்துராமலிங்கத் தேவரை விமர்சனம் செய்து பேசியதால் முக்குலத்தோர் அமைப்பினர் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டண போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

உசிலையில் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், அவர் மதுரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார் என்ற தகவல் தெரிந்த உடன்,

பிரச்சினைகள் வராமல் முன்னெச்சரிக்கையாக கொளத்தூர் மணி மதுரைக்குச் செல்ல தடை போட்டனர் போலீசார்.

அம்மையநாயக்கனூரில் கொளத்தூர் மணி தடுத்து நிறுத்தப்பட்ட உடன், தனக்குப் பாதுகாப்பு தரும் ஆற்றல் போலீசாருக்கு இல்லை என்று கூறினால்,

திண்டுக்கல்லில் இருந்து திரும்பி சென்றுவிடுவதாக கொளத்தூர் மணி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு உறுதி தரப்படவில்லை என்றால் தடையை மீறி மதுரைக்குச் செல்வேன் என்றும் கொளத்தூர் மணி கூறினார்.

                                       

இதனால் போலீசார் மற்றும் கொளத்தூர் மணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 4 மணி நேரம் அம்மையநாயக்கனூர் சாலையிலேயே கொளத்தூர் மணி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.

பின்னர் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறிய போலீசார் கொளத்தூர் மணியைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்திகள்: கவின்

SHARE