கே எம் சி எச்- புற்றுநோய் மையத்தின் 6 ஆம் ஆண்டு விழா

ciombatore

????????????????????????????????????
Advertisement
Advertisement

2017 நவம்பர் 12-ம் தேதி கேஎம்சிஎச் புற்றுநோய் மையம் (CCC) தனது 6 ஆம்
ஆண்டு விழாவை கொண்டாடியது. இதில் புற்றுநோயிலிருந்து குணமடைந்த 300
நபர்கள், அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கேஎம்சிஎச்-இன் புற்றுநோய் மையம் (CCC) 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு,
புற்றுநோயாளிக்கு நம்பத்தக்க மருத்துவ மையமாக படிப்படியாக வளர்ச்சியடைந்து,
இன்று ஒரு புற்றுநோய் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுக்காக
அனைவரும் நாடும் ஒரு மையமாக உருவாகியுள்ளது.

புற்றுநோய் மையம், கதிரியக்க சிகிச்சை, ஆழமான காயம் தவிர்க்கும் எந்திர
அறுவைச் சிகிச்சை, கீமோ சிகிச்சை, பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்கு மட்டுமான சிகிச்சை,ஹேமட்டோ சிகிச்சை ஆகிய அனைத்து வகை மருத்துவ வழிமுறைகளையும்
மேற்கொள்ளும் வசதி கொண்டதாகும்.

பல வகை சிக்கலான கீமோ சிகிச்சை நெறிமுறைகளை புற்றுமருந்தியல்(Medical Oncology), ஹீம்டோ புற்றுநோயியல் (Haemato Oncology) ஆகியதுறைகள் மேற்கொள்கின்றன. இங்கு எலும்பு மஜ்ஜை (Bone Marrow) மாற்று சிகிச்சையும்வெற்றிகரமாகச் செய்யப்படுகிறது. இம்மையத்தின் புற்றியல் கதிரியக்க சிகிச்சை(Radiation Oncology Facilities) வசதி அதி நவீன ரேடியோ சிகிச்சைகளான
ஸ்டீரியோடேக்டிக் ரேடியோ சிகிச்சை (Stereotactic Radiosurgery) , ஸ்டீரியோடேக்டிக்
உடல் ரேடியோ சிகிச்சை (Stereotactic Body Radiotherapy), நான்கு முகத் தன்மையான
ரேடியோ சிகிச்சை (4D Gated Radiotherapy), அதிநவீன ப்ரேகியோசிகிச்சை (Brachytherapy)ஆகியவற்றை அளிக்கவல்லது.

புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக் குழு சிக்கலானஅறுவைச் சிகிச்சைகளையும், எந்திர அறுவைச் சிகிச்சையையும் மேற்கொள்கிறது.மார்பு மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை (Breast Reconstruction Surgeries), செண்டினல்லம்ப் நோட் பயாப்சி (Sentinel Lumpnode biopsies), முற்றிய கருப்பைப் புற்றுநோய்கானஎச்ஐபிஇசி (HIPEC)சிகிச்சை முறை, எலும்புப் புற்றுக்கான கை, கால் மறுசீரமைப்புசிகிச்சை (Limb Reconstruction for Bone Cancers) ஆகியவை சிறப்பாக செய்யப்படுகின்றன.

எஃப்டிஜி பெட் ஸ்கேன் (FDG PET Scan), பிஎஸ்எம்ஏ பெட் ஸ்கேன் (PSMA PET Scan)
ஆகிய இரண்டையும் புற்றுநோய் மருந்தியல் துறை வழங்குகிறது. தைராய்டு
கோளாறு, தைராய்டு புற்றுநோய் ஆகியவற்றுக்கான ரேடியோ ஐயோடின் சிகிச்சை
(Radioiodine Treatments), எலும்புப் புற்றுக்கான வலி நிவாரண சிகிச்சை (Bone pain palliation

therapies), அறுவைச் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட ஹெபோட்டொ செல்லுலார் (Hepatocellular)புற்றுக்கான ரீனியம் சிகிச்சை (Rhenium Therapies) ஆகியவையும் இங்கு வழக்கமாகமேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு நோயாளிக்குமான சிகிச்சை குறித்து முடிவு செய்யும் பொருட்டு,
இம்மையத்தில், நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் கொண்டு
ஆலோசிக்கப்படுகிறது. இந்த முறையினால், சோதனைகள், சிகிச்சையில் மாற்றம்,
வலி நிவாரண கவனிப்புக்கான ஆலோசனை வழங்குதல் குறித்த முடிவுகள், நோய்
குறித்த சமூகப் பிரச்சனைகளை அலசுதல் போன்ற ”நோயாளியை மையப்படுத்திய
சிகிச்சை” வழங்குவது சாத்தியமாகிறது.

கடந்த 6 ஆண்டுகளில், இந்த மையம் 20,000க்கும் மேலான புற்றுநோயாளிகளுக்கு
சிகிச்சை மேற்கொண்டுள்ளது. 32000க்கும் அதிகமானோர் கீமோ சிகிச்சைகளையும்
4000க்கும் அதிகமானோர் ரேடியோ சிகிச்சைகளையும் அளித்துள்ளது.

மரபின்மைந்தன் முத்தையா

பொதுமக்களுக்காக, இம்மருத்துவமனை அவ்வப்போது புற்றுநோயைக் கண்டறியவும்,
விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முகாம்களை நடத்துகிறது. இது, ஆரம்ப நிலையில்
நோயைக் கண்டறியவும், நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள்
ஆரோக்கியமாக வாழும் முறையைக் கடைப்பிடிக்கவும் உதவுகிறது. இம்மையத்தில்,
புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கும்
உணர்வுபூர்வமான ஆதரவு வழங்கும் பொருட்டு அந்நோயிலிருந்து மீண்டவர்களைக்
கொண்டு ‘கேன்ஸர்வ்’ என்ற ஆதரவுக் குழு செயல்படுகிறது.

இந்த நேரத்தில், கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.
பழனிசாமி அவர்கள் கூறுகையில், “புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே
கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடியதே. அதே வேளையில், இரண்டாம் நிலையில்
எங்களிடம் வரும் நோயாளிகளின் வாழ்வையும் எங்களால் நீட்டிக்க இயலும். வலி
நிவாரண நிலை, ஆதரவு நிலை என்ற நிலையிலுள்ள நோயாளிகளுக்கும் கூட வாழும்
தரத்தை மேம்படுத்த கேஎம்சிஎச் என்றும் முயற்சிக்கிறது. சிகிச்சையைப் போலவே
நோய்த் தடுப்பும் முக்கியம் என கேஎம்சிஎச் கருதுகிறது. தொடர்ந்து பொது
மக்களிடையே நோயைக் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவி வருகிறது,”என்றார். மேலும், “தமது நவீன வசதிகளுடன், கேஎம்சிஎச் இந்திய மற்றும் வெளிநாட்டுநோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சையளிப்பதில் தொடர்ந்து உதவி வருகிறது,” என்றார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்ற ‘கலைமாமணி’ திரு.
மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம்
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119