கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அடிக்கல் நாட்டு விழா!

900 படுக்கை வசதி

Advertisement

கோவை மெடிக்கல் சென்டர்

Advertisement

ஹாஸ்பிட்டல் லிமிடெட் (KMCH), 900 படுக்கை வசதி மற்றும் பல்துறைசிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனை. ஒருங்கிணைந்த, மருத்துவ தீர்வுகளைக் வழங்கக்கூடிய இந்த மருத்துவமனை, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில்,கோவை நகரில் பசுமையான சூழலில் 25 ஏக்கர்நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

1990ம் ஆண்டு துவக்கப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதிலும்,நோயாளிகளின் மருத்துவத்தில் சிக்கல்களை குறைத்து நலன்களை மேம்படுத்தும் ஸ்டீராய்டு இல்லாத சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை, மூளையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும், ரத்த நாள அதிநவீன சிகிச்சை(GDC coiling மற்றும் Cliping) போன்ற பல்வேறு நவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக
உள்ளது.

27 ஆண்டுகள் இடைவிடாத சேவையால், இந்த மண்டலத்தில் மிகுந்த நம்பிக்கை மிக்க, தரமானசிகிச்சை தரும் நிறுவனமாக உருவாகியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 1000ம் பேருக்கு 1 மருத்துவர் என்ற விகிதசரத்தைவிட இந்தியாவில்மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள தகவலின்படி,
கடந்த மார்ச்31, 2017 வரையில், 10,22,859 மருத்துவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநிலமருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றுள்ளனர்.

இந்திய பொது நல மருத்துவ இதழ் ஆராய்ச்சி வெளியீட்டில், கடந்த 2014ம் ஆண்டில் 10,000 நபருக்கு 4.8என்ற அளவிலான மருத்துவர்களே இருந்தனர்.

வரக்கூடிய ஆண்டுகளில் வளரும் மக்கள்தொகை மற்றும்மருத்துவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து கொள்ளும்பொழுது, 2030ஆம் ஆண்டில் நமதுமக்கள்தொகை 1.476 பில்லியனாக இருக்கும் அதே சமயம் 10000 நபர் கொண்ட மக்கள்தொகைக்கு 6.9 என்றஅளவில் தான் மருத்துவர்கள் விகிதம் இருக்கும்.

இது உலக சுகாதார மையம் நிர்ணயித்துள்ள 1:1000விகிதாசாரத்தை விட மிக குறைவானது.

அடுத்த 12 ஆண்டுகளில் 2.07 மில்லியன் மருத்துவர்களை உருவாக்கினால் தான் நாம் உலக சுகாதார மையம்நிர்ணயித்துள்ள மருத்துவர்கள் மக்கள்தொகை விகிதாசர இலக்கான 1:1000 (1000 மக்களுக்கு 1 மருத்துவர் )
என்பதை அடைய முடியும்.

நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் 61000 க்கும் அதிகமான மருத்துவர்களைஉருவாக்கி கொண்டிருக்கும் நிலையில் கூட 2030ஆம் ஆண்டில் நாம் நிர்ணியக்கப்பட்ட இலக்கை
அடையமுடியாது.

புதிய கல்லுாரிகள் துவங்குவதாலும் மற்றும் எம்.பி.பி.எஸ், முதுநிலை மருத்துவபடிப்புக்கான இடங்களை அதிகரிப்பதாலும் மட்டுமே தேவையான மருத்துவர்களையும், மருத்துவபணியாளர்களையும் உருவாக்கமுடியும்..

அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் நாட்டில் குறைந்தபட்சம் 600
மருத்துவ கல்லுாரிகள் உருவானால் மட்டுமே கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

வரும் காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு எற்ப மருத்துவர்களை உருவாக்க புதிய மருத்துவ கல்லுாரி,மருத்துவமனைகளை அதிகரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியோடு, தனியார் துறை மருத்துவ கல்வி மற்றும்
மருத்துவ நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

மருத்துவ கட்டமைப்பு வசதி, மனிதவளம் போன்றவைகளின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் மற்றும், மருத்துவ பணியாளர்களையும் உருவாக்குவதில் முனைந்துள்ளது.

புதிய மருத்துவ கல்லுாரி துவங்கி சிறந்த மருத்துவ கல்வியை அளிப்பதோடு, சிறந்த மருத்துவர்களையும்உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது.

உலகத்தரத்தில் மருத்துவ சிகிச்சையும் கல்வி மற்றும் பயிற்சி தருவதையும் பணியாக கொண்டு செயலாற்றும்KMCH மருத்துவமனை கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி(KMCH INSTITUTE OF HEALTH SCIENCES AND RESEARCH) என்ற பெயரில் ஒரு புதியமருத்துவக்கல்லூரி துவங்க உள்ளது.

மிகவும் திறன் வாய்ந்த, உயர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள்,
மருத்துவர்களை உருவாக்க தேவையான சூழல், கற்கும் சுழல்களுடன், அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன்உருவாக்கவுள்ளது.

புதிய கே.எம்.சி.ஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழக ஆளுநர், மாண்புமிகுஸ்ரீ பன்வரிலால் புரோகித் அடிக்கல் நாட்டினார்.

கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள்அனைவரையும் வரவேற்று, புதிய மருத்துவ கல்லூரியை பற்றி கூறினார். கேஎம்சிஹெச் துணைத்தலைவர்டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றினார்.

கேஎம்சிஹெச் டீன் டாக்டர்.V.குமரன் அவர்கள்நன்றி கூறினார். விழாவில் இந்த மண்டலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள், நிறுவனங்களின்இயக்குனர்கள், ஆலோசகர்கள் மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்
பங்கேற்றனர்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119