மண்சோறு சாப்பிடும் கதிராமங்கலம் மக்கள்..!

0
445
மண்சோறு சாப்பிடும் கதிராமங்கலம் மக்கள்..!
Advertisement

மண்சோறு சாப்பிடும் கதிராமங்கலம் மக்கள்..!

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி, கிராம மக்கள் மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்சோறு சாப்பிடும் கதிராமங்கலம் மக்கள்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகில் உள்ள கதிரா மங்கலம் கிராமத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும்.

இதற்காகப் போராடி சிறையில் உள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

கதிராமங்கலம் கிராம மக்கள், அங்குள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, 16-வது நாளான நேற்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள்,

“மண்ணை சாப்பிட்டாவது மண்ணைக் காப்போம்” என முழக்கமிட்டு மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

கதிராமங்கலத்துக்கு நேற்று வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு செயற்பாட்டாளர் சுப. உதயகுமார் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும்

அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்து குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: ரோகிணி

Advertisement
SHARE