தற்கொலைப் படை தாக்குதல் முறியடிப்பு..!

0
162
தற்கொலைப் படை தாக்குதல் முறியடிப்பு..!
Advertisement

தற்கொலைப் படை தாக்குதல் முறியடிப்பு..!

Advertisement

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மற்றும் சம்பல் காவல்துறை இணைந்து இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநகரைச் சேர்ந்த காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

சிஆர்பிஎஃப் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் அதிகாலை 4 மணியளவில், முகாமுக்கு அருகில் இருந்த திறந்தவெளியில் இருந்து நிகழ்த்தப்பட்டது.

சிஆர்பிஎஃப் 45-வது படைப்பிரிவு மற்றும் பந்திப்போரா மாவட்ட சம்பால் காவல்துறையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்கொலைப்படைத் தாக்குதலை வீரர்கள் திறம்பட முறியடித்தனர். தேடுதல் பணி இன்னும் தொடர்ந்து வருகிறதுஎன்று கூறியுள்ளார்.

SHARE