கண் திருஷ்டி நீங்க-அர்த்தமுள்ள…ஆன்மீகம்

கடல் நீரை

Advertisement

கண் திருஷ்டி நீங்க

Advertisement

எண்ணம் நன்றாக இருக்குமானால் எல்லாம் நல்லதாகத்தான் நடக்கும். எனவே, நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி”யாக மாறுகிறது.

இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

எலுமிச்சை பழம் :

எலுமிச்சை பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

ஆரத்தி :

ஆரத்தி எடுக்க பயன்படுத்தும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றிற்கு கண்திருஷ்டியை விரட்டும் ஆற்றல் உண்டு. வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு. எனவேதான் வாழைமரத்தை வாசலில் கட்டுகின்றனர்.

சாம்பிராணி :

அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் சாம்பிராணி புகையை காட்ட திருஷ்டி கழியும்.

கடல் நீர் :

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

பசு கோமியம் :

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டில் தெளித்தால் தீய சக்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119