கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தாவை சந்திக்கும் கமலஹாசன்..!

349
888
கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தாவை சந்திக்கும் கமலஹாசன்..!
Advertisement

கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தாவை சந்திக்கும் கமலஹாசன்..!

கேரள மற்றும் டில்லி முதல்வரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அடுத்தப்படியாக,

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார்.

இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் நான் அரசியல் களத்திற்கு வரத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுல்ல தமிழக மக்களின் நலனுக்காக தான் முதல்வராகவும் தயார் என்று கூறியுள்ளார்.

கமலின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் ரீதியான செயல்களாகவே இருக்கிறது. சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் சென்னை வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் கமல்.

ஊழலுக்கு எதிராக தோள் கொடுக்கும் அனைவரும் என் நண்பர்கள் என்று பேசிய கமல்,

அடுத்தப்படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அரசியல் குறித்த தமது நிலைப்பாட்டை தெரிவிக்க இருப்பதாகவும்,

இதுதொடர்பாக மம்தாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களது சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.,வை சார்ந்திராத கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் மம்தாவையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
SHARE