இந்திய ஜூனியர் உலக கோப்பை கால்பந்து  அணி வெற்றி..!

94
477
இந்திய ஜூனியர் உலக கோப்பை கால்பந்து  அணி வெற்றி..!
Advertisement

இந்திய ஜூனியர் உலக கோப்பை கால்பந்து  அணி வெற்றி..!

இந்திய ஜூனியர் உலக கோப்பை கால்பந்து (17 வயது) அணி, பயிற்சி போட்டியில் மொரீசியஸ் அணியை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் வரும் அக்., 6ல் துவங்கி, 28 வரை நடக்கவுள்ளது.

மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கும். இந்திய அணி முதன் முறையாக இத்தொடரில் பங்கேற்கத் தயாராகி வருகிறது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் கோவாவில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில்,  மொரிசியஸ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் இந்தியா களமிறங்கியது.

முதல் பாதியில் இரு அணி தரப்பிலும் கோல் அடிக்கவில்லை. இதனால், இரண்டாவது பாதியில் அணியில் பெருமளவு மாற்றம் செய்தார் இந்திய அணி பயிற்சியாளர் லுாயிஸ் நார்டன்.

மொத்தமுள்ள 11 பேரில் 8 பேரை மாற்று வீரர்களாக களமிறக்கினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. போட்டியின் 68 நிமிடம் போரிஸ் சிங் முதல் கோல் அடித்தார்.

82வது நிமிடம் மெகர், கடைசி நிமிடத்தில் (90வது) அனிகித் ஜாதவ் என, தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 3–0 என, வெற்றி பெற்றது.

உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்திய ஜூனியர் அணி, சொந்தமண்ணில் பெற்ற முதல் சர்வதேச வெற்றி இதுவாக அமைந்தது.

Advertisement
SHARE