பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய்.. இழப்பீடு வழங்க உத்தரவு..!

54
760
பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய்.. இழப்பீடு வழங்க உத்தரவு..!
Advertisement

பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய்.. இழப்பீடு வழங்க உத்தரவு..!

Advertisement

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 41.70 கோடி டாலர் (ரூ. 267 கோடி) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய்.. இழப்பீடு வழங்க உத்தரவு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரை தொடர்ச்சியாக பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட,

பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த ஈவா செவேரியா என்பவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புகழ்பெற்ற குழந்தைகள் பவுடரை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தார்.

1950-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுவரை தினசரி பயன்படுத்தி வந்துள்ளார்.

இவருக்கு 2007-ம் ஆண்டு கர்ப்பபை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காரணமே இல்லாத வகையில் அபாயகரமான மற்றும் குறைபாடுள்ள பவுடர் காரணமாக இந்த நோய் தாக்கியதாக இவர் வழக்கு தொடுத்தார் .

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறும்போது, வழக்கு தொடுத்தவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய நிலையில்,

தற்போது வழக்கு தொடுப்பது உள்நோக்கமானது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.

SHARE