ஐ.பி.ஆர்.சி. மையத்தில் காலி பணியிடங்கள்..!

0
167
ஐ.பி.ஆர்.சி. மையத்தில் காலி பணியிடங்கள்..!
Advertisement

ஐ.பி.ஆர்.சி. மையத்தில் காலி பணியிடங்கள்..!

Advertisement

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் இஸ்ரோ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச பிரசித்தி பெற்ற நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் நெல்லையில் உள்ள இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐ.பி.ஆர்.சி.,) மையத்தில்,

டெக்னீசியன் / டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 139 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : பிட்டரில் 15, வெல்டரில் 8, எலக்ட்ரீசியனில் 8, டர்னர், மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் தலா 2,

 சிவிலில் 7, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 2, ஏ.சி., மெக்கானிக்கில் 1,

டீசல் மெக்கானிக்கில் 8, கார்பெண்டரில் 2, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – கெமிக்கலில் 1, பாசாவில் 18, மெக்கானிக்கலில் 13,

எலக்ட்ரிகலில் 7, எலக்ட்ரானிக்சில் 12, கெமிக்கலில் 5, சிவிலில் 7ம் சேர்த்து மொத்தம் 139 இடங்கள் உள்ளன.

வயது : இவற்றில் சில பதவிகளுக்கு உச்ச பட்ச வயது 35 ஆகவும், இதர பதவிகளுக்கு 26 ஆகவும் உள்ளது.

சரியான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் என்ற நேரடி விண்ணப்ப முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017,செப்.2

விபரங்களுக்கு : http://career.iprc.gov.in:8080/Apprentice-2017/advt.jsp

தகவல்கள்: கவின்

SHARE