பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு..!

35
621
பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு..!
Advertisement

பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு..!

Advertisement

வேளாண் பொறியியல் துறையில் சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு பற்றவைப்பாளர் (வெல்டர்) பணியிடத்துக்கு, பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு..!

சென்னையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுப்போட்டியில் முன்னுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன்,

ஐடிஐ வெல்டிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் தோராயமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

இதே துறையில், மூன்று உழுவை துடைப்பவர் (டிராக்டர் கிளீனர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு பொதுப்போட்டியில் முன்னுரிமை, ஆதிதிராவிடரில் முன்னுரிமையில் அருந்ததியர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர்- சீர்மரபினரில் முன்னுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகனம் ஓட்டதெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் தோராயமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி பொதுப் பிரிவினர் எனில் 30 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 32 வயது,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 487, அண்ணாசாலை, நந்தனம் சென்னை- 600035 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

SHARE